இனியும் அமைதியாக இருக்காதீர்கள். வாயை திறந்து பேசுங்கள் யுவராஜை வறுத்தெடுக்கும் – ரசிகர்கள்

Yuvraj-Singh

தோனிக்கு எதிராக யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தொடர்ந்து புகார்களை அடுக்கி வருகிறார். ஆனால் இதற்கு யுவ்ராஜிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. எனவே இந்த விடயம் தற்போது பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது.

Yograj

தோனி மீது தொடர்ந்து புகார்களை அளித்து வரும் யுவராஜ் சிங்கின் தந்தை தற்போது இந்திய அணி அரையிறுதியில் தோற்க தோனியை காரணம் காட்டியுள்ளார். அவர் மட்டுமே உலக கோப்பையை வென்ற கேப்டனாக இருக்க வேண்டும் என்று இந்திய அணியை வேண்டும் என்றே தோற்கடித்தார். அவர் ஒரு சுயநலவாதி என்பது போன்று தனது குற்றச்சாட்டுகளை வைத்தார்.

- Advertisement -

இதுகுறித்து யுவ்ராஜும் தற்போது வரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஏற்கனவே யுவராஜ் தோனி இடையே பிரச்சனை இருந்தது என்று அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இப்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக யுவராஜ்சிங்கின் தந்தை இவ்வளவு தோனியை வெளிப்படையாக தொடர்ந்து பேசியும் யுவராஜ் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனவே தோனியின் ரசிகர்கள் யுவராஜிடம் பதிலை எதிர் பார்க்கின்றனர்.

yuvidhoni

நீங்கள் அமைதியாக இருந்தது போதும் யுவராஜ், தோனி குறித்து உங்களது தந்தை கூறியது சரி அல்லது தவறு என்பதை மட்டும் கூறுங்கள் என்பது போல தொடர்ந்து இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை தோனி குறித்து யுவராஜ் தொடர்ந்து மௌனம் காத்து வருவது இருவருக்குமிடையே பிரச்னை இருப்பதை காட்டுகிறது என்பதே உண்மை.

- Advertisement -
Advertisement