சாஹல் குறித்து நான் பேசியது தவறாக இருந்தால் மன்னியுங்கள். பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங் – விவரம் இதோ

Yuvi
- Advertisement -

எந்த மட்டத்திலும் சாதிய வன்மம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியதால் மட்டுமே ஒரு சில குறிப்பிட்ட சாதிகளை இழிவாக பார்க்கிறார்கள் என்று பொது மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனாலும் எவ்வளவு தான் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் கூட அந்த மட்டத்திலும் சாதிய ரீதியான தாக்குதல்களும் வன்மங்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

yuvraj 3

- Advertisement -

அது எப்படிப்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் சரி, அவர்களிடமும் சாதிய வன்மம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இதற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளார் யுவ்ராஜ் சிங். இந்திய கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாத ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருப்பவர் யுவ்ராஜ் சிங். 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கடுமையாக போராடி பெரிதாக பங்களித்தவர்.

தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர் தனக்கு தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் . அவ்வாறு சமீபத்தில் யுவராஜ் சிங்கும் ரோகித் சர்மாவும் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யுஜவேந்திர சாஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் குறிப்பிட்டு சாதிய ரீதியாக பேசிக்கொண்டிருந்தார்.

Chahal

அதாவது சாஹலின் டிக் டாக் வீடியோக்களை பற்றி ரோஹித் சர்மாவிடம் கிண்டலாக பேசிக் கொண்டிருந்தார் யுவ்ராஜ் சிங். மேலும் ”போங்கி” மக்களுக்கு இது வேலை அல்ல, அவர்களது வேலை வேறு. ஆனால் டிக்டாக் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் யுவ்ராஜ் சிங். வால்மீகி என்று கூறப்படும் சாதியைச் சேர்ந்தவர் சாஹால்.

- Advertisement -

உயர் மட்டத்தில் இருக்கும் யுவராஜ் சிங் இதனை கிண்டல் செய்யும் விதமாக இப்படி பேசியிருக்கிறார். அவரது மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்று சாஹாலுக்கு கூட தற்போது தான் தெரிந்திருக்கும். இந்த காலகட்டத்தில் கூட பொருளாதார ரீதியாக இருவரும் சமமாக இருக்கும் போதும் சாதிரீதியாக வன்மத்துடன் கிண்டல் செய்தது கண்டிக்கத்தக்கது.

Chahal-1

வால்மீகி இனத்தவர்கள் வட இந்தியா முழுவதும் கூட்டும் தொழிலை செய்து வருகின்றனர். இதனை வைத்து கூட்டும் தொழிலை செய்பவர் எதற்கு டிக் டாக் செய்கிறார் என்பது போல் வன்மத்தை கக்கியுள்ளார் யுவராஜ். இதனை கேட்டுக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவும் பெரிதாக எதிர்க்கவில்லை. அவரும் சிரித்துக் கொண்டேதான் இருந்தார்.

- Advertisement -

பின்னர் இந்த விஷயம் சர்ச்சையாகியது. ஹரியானாவை சேர்ந்த ராஜன் சல்சன் என்பவர் இந்த விவகாரத்தில் யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா மாநிலம் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக மாறியதை அடுத்து யுவராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் நான் ஒருபோதும் இந்திய நாட்டு மக்களிடையே சாதி, நிறம் ,பாலினம் என எந்த ஒரு பாகுபாட்டுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்களின் நலனுக்காக செலவிட விரும்புகிறேன் ஒவ்வொரு மனிதனுக்கும் சுய மரியாதை இருக்கிறது, அதை நான் மிகவும் மதிக்கிறேன்.

நான் என்னுடைய நண்பரிடம் பேசும்போது அது தவறாக எடுத்துக் கொள்ளப் பட்டதாக எனக்கு தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்திய நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் புனிதமானது என யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement