யுவராஜிக்கும்…அவர் மனைவி ஹேசல் கீச்சிற்கும் பிரச்சனையா ? – விவரம் உள்ளே

- Advertisement -

இவருக்கும் நடிகையான ஹேசல் கீச்சிற்கும் ஒரு சந்திப்பின்போது காதல் மலர்ந்தது. இரண்டாடுகள் காதலித்தபின்னர் கடந்த 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
yuvi

திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் தலைகாட்டாத ஹேசல் கீச் தனது கணவரின் குடும்பத்தை கவனித்து வந்தார். தனது கணவரின் குடும்பத்தினருக்காக ஹேசல் கீச் என்கிற தனது பெயரை குர்பசந்த் கவுர் என்று மாற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்த யுவராஜ் சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மனக்கசப்பு என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.கடந்த பிப்ரவரி மாதம் தான் ஹேசல் கீச்சின் பிறந்தநாளை கொண்டாட யுவராஜ்சிங் வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சர்ப்ரைஸ் தந்து வாழ்த்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு அசத்தினார்.

Hazel

இந்நிலையில் திடீரென்று கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்று செய்திகள் வெளியாக உடைந்துபோன யுவராஜின் மனைவி அதெல்லாம் ஒன்றுமில்லை நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம் என்பதை காட்டிடும் விதமாக யுவராஜ்சிங்கின் குடும்பத்தாருடன் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிந்துள்ளார்.

ஹேசல் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படத்தில் யுவராஜின் தாய் ஷப்னம் மற்றும் யுவியின் சகோதரர் ஜொராவர் உள்ளனர்.இதனால் யுவராஜ் குடும்பத்திற்குள் பிரச்சனை என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஹேசல்.

Advertisement