எனது வளர்ச்சியில் இவருக்கும் பங்கு உண்டு – அஸ்வின் பெருமிதம்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

ashwin

இந்த வருடம் ஐபிஎல்-இல் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரியில் பெங்களூரில் நடைபெற்றது.இந்த ஏலத்தில் பஞ்சாப் அணி யுவராஜ் சிங் மற்றும் முதல்நாள் ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெய்லை இரண்டாம் நாள் கடைசி நேரத்தில் ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

அதிரடி ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங் மற்றும் கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.இறுதியாக தான் இருவரையும் அவர்களது ஏலத்தின் அடிப்படை விலையான 2 கோடியை கொடுத்து வாங்கியது.

yuvraj

இந்நிலையில் தான் நேற்று பஞ்சாப் அணியின் ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது. இதில் பேசிய பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக் “யுவராஜ் மற்றும் கெய்ல் பஞ்சாப் அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளை வென்று தந்தாலே போதும்” மற்றதை அணி பார்த்துக்கொள்ளும் என்று கூறினார்.

- Advertisement -

சேவாக்கிற்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஷ்வின் யுவராஜ்சிங்கை புகழ்ந்து தள்ளிவிட்டார். இன்று கிரிக்கெட்டில் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு முதற்காரணம் யுவராஜ்சிங் தான். மற்ற அனைவரையும் விட எனக்காக சற்று அதிகம் சப்போர்ட் செய்தவர். என்னுடைய பல திறமைகள் அவர் ஊக்கப்படுத்தியதாலே வெளிப்பட்டது.இந்த ஐபிஎல்-இல் அவரோடு இணைந்து விளையாட ஆவலோடும் மகிழ்ச்சியோடும் தயாராக இருக்கின்றேன் என்றார்.

yuvi

Advertisement