அடுத்த ஜென்மம் இருந்தா கிரிக்கெட்ல இந்த சாதனை படைக்கணும் அதுவே என் ஆசை – யுவ்ராஜ் சிங் பதிவு

Yuvraj
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெறும். 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர், தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கிய பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ஸ்பின் பௌலராகவும் செயல்பட்டு, பல இக்கட்டான நேரங்களில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு, வெற்றி பெற வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்ற மிக முக்கிய காரணமாக திகழ்ந்த யுவராஜ் சிங்,

yuvraj 2

- Advertisement -

அந்த இரண்டு உலக கோப்பை தொடர்களிலும், தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் மிக முக்கிய வீரராக மட்டுமல்லாமல் மேட்ச் வின்னராகவும் ஜொலித்த அவர், இந்திய டெஸ்ட் அணிக்காக 40 போட்டிளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது சற்று வருத்தத்திற்கு குறிய விஷயம்தான். சமீபத்தில், ஒரு பிரபலமான கிரிக்கெட் இணையளதம், எந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறார் ? என்ற கேள்வியை ரசிகர்களிடம் கேட்டது. அந்த கேள்வியுடன் யுவாராஜ் சிங்கின் புகைப்படத்தையும் இணைத்துள்ளது அந்த இணையளதம்.

இந்த கேள்வியைப் பார்த்த யுவராஜ் சிங் அதற்கு உடனடியாக பதிலளித்தார். அந்த பதிவில், 7 வருடங்களாக அணியில் நான் 12வது வீரராக இல்லாத பட்சத்தில், என்னுடைய அடுத்த வாழ்க்கையில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார்.
இந்திய ஒரு நாள் அணியில் 2000ஆம் ஆண்டே யுவராஜ் சிங் அறிமுகமாகி இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்கு 2003ஆம் ஆண்டு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1900 ரன்களுடன் சேர்த்து 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் நட்டெபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவருக்கு அதற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் 304 ஒரு நாள் போட்டிகளில் 8701 ரன்கள் மற்றும் 111 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள யுவராஜ், 51 டி20 போட்டிகளில் 1177 ரன்களும், 31 விக்கெட்டுகளையும் வீழ்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement