4 சிக்ஸர்களை அடித்த நான் கடைசி பந்தில் 5 ஆவது சிக்ஸர் அடிக்காமல் போனதற்கு இதுவே காரணம் – யுவி வெளிப்படை

Yuvi
- Advertisement -

இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு உலக தொடர் (Road Safety World Series) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், சவுத்ஆப்பிரிக்கா லெஜன்ட்ஸ் அணியும் நேற்றைய போட்டியில் மோதின.

Yuvi 1

- Advertisement -

இந்த போட்டியில் 18-வது ஓவரை எதிர்கொண்ட இந்திய அணியின் லெஜெண்ட் மற்றும் அதிரடி வீரரான யுவராஜ் சிங் முதல் பந்தை தவிர்த்து மற்ற 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் யுவராஜ் சிங்கின் இந்த அதிரடியான சித்தர்களை கண்ட ரசிகர்களும் மீண்டும் பழைய யுவராஜ் வந்துவிட்டதாக தற்போது அவரின் இந்த சிக்ஸர் வீடியோவை இணையத்தில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

முதல் பந்தினை டாட் பாலா விளையாடிய யுவராஜ் சிங் அடுத்தடுத்து 4 பந்துகளை பிரம்மாண்டமான சிக்சருக்கு விரட்டினார். 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த யுவராஜ் மீண்டும் தற்போது 4 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் ஏன் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஐந்தாவது சிக்ஸரை தொடர்ந்து அடிக்காமல் விட்டேன் என்பது குறித்தும் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அந்த ஓவரின் முதல் பந்தில் நான் டாட் பாலை விட்டதும் அடுத்ததாக சிக்சர் அடிக்க முடிவு செய்தேன். அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு சிக்ஸரை அடித்ததும் கடைசி பந்தில் சிக்சர் அடிக்கலாம் என்று தான் யோசித்தேன்.

Yuvi-1

மேலும் பந்து எனக்கு ஏதுவாக வந்திருந்தால் நிச்சயம் சிக்ஸ் அடிக்கவே நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பு அடுத்ததாக 2 ஓவர்கள் இருப்பது எனக்கு நினைவிற்கு வந்தது. எனவே கடைசி வரை நின்று அந்த இரண்டு ஓவரிலும் பேட்டிங் செய்தால் இந்திய அணிக்கு பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும். எனவே அந்த கடைசி பந்தில் சிங்கில் அடித்துவிட்டு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே அந்த சிக்ஸரை அடிக்காமல் விட்டதாகவும் யுவராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement