4 பந்துகளில் 4 சிக்ஸர்கள். மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து வைத்த விண்டேஜ் யுவி – வைரலாகும் வீடியோ

Yuvi

இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு உலக தொடர் (Road Safety World Series) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியா லெஜண்ட்ஸ் அணியும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், சவுத்ஆப்பிரிக்கா லெஜன்ட்ஸ் அணியும் நேற்றைய போட்டியில் மோதின.

Yuvi 1

இந்த போட்டியில் 18-வது ஓவரை எதிர்கொண்ட இந்திய அணியின் லெஜெண்ட் மற்றும் அதிரடி வீரரான யுவராஜ் சிங் முதல் பந்தை தவிர்த்து மற்ற 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் யுவராஜ் சிங்கின் இந்த அதிரடியான சித்தர்களை கண்ட ரசிகர்களும் மீண்டும் பழைய யுவராஜ் வந்துவிட்டதாக தற்போது அவரின் இந்த சிக்ஸர் வீடியோவை இணையத்தில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

முதல் பந்தினை டாட் பாலா விளையாடிய யுவராஜ் சிங் அடுத்தடுத்து 4 பந்துகளை பிரம்மாண்டமான சிக்சருக்கு விரட்டினார். 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த யுவராஜ் மீண்டும் தற்போது 4 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் கிரிக்கெட் உலகின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் தனது பங்கிற்கு ஒரு பக்கம் அதிரடி காட்ட இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய 204 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இதன்காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு 205 அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

sachin

சச்சின் இந்த போட்டியில் 37 பந்துகளில் 60 ரன்களையும், யுவராஜ் 22 பந்துகளில் 52 ரன்கள் குவித்தனர். அதனை தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 148 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய லெஜண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.