டிசம்பர் 12 ஆம் தேதி தனது நண்பருடன் தனித்தீவில் பிறந்தநாளை கொண்டாடிய யுவராஜ் – வைரலாகும் புகைப்படம்

Yuvi-3
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மற்றும் முன்னாள் வீரருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2000மாவது ஆண்டு கங்குலி தலைமையில் கென்யா அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர் சமீபத்தில் ஓய்வினை அறிவித்தார்.

Yuvraj-Singh

- Advertisement -

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடிய இந்தியாவின் மிகச் சிறந்த வீரருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் யுவராஜ்சிங் தனது பிறந்தநாளை எங்கு கொண்டாடியுள்ளார் என்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங்குடன் தனித்தீவில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை யுவராஜின் பிறந்தநாள் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “ஹாப்பி பர்த்டே பிரதர். லட்ஸ்ட் மோர் டைம் அஹேட்” என்று குறிப்பிட்டு அந்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதனால் யுவராஜ் தனது பிறந்தநாளை அகார்கருடன் தாய்லாந்து நாட்டில் கொண்டாடியுள்ளது உறுதியாகி உள்ளது.

Yuvi-1

மேலும் யுவராஜ் உடன் சச்சின், ஜாஹீர் கான், அகார்கர், ஹர்பஜன் சிங் என பல நண்பர்கள் மட்டுமின்றி ஒரு நண்பர்கள் கூட்டத்தையே தன்னுடன் அழைத்து சென்று தாய்லாந்தில் அவர் இந்த பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். யுவராஜின் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement