ஐ.பி.எல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் யூசுப் பதான் எடுத்துள்ள அதிரடி முடிவு – சூப்பர் தான்

Yusuf
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யூசப் பதான் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னரான யூசுப் பதான் பேட்டிங்கிலும் அதிரடி காட்டுவது மட்டுமின்றி தேவையான நேரத்தில் பந்துவீசியும் வந்தார். இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் யூசுப் பதானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

yusuf

- Advertisement -

2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 174 போட்டிகளில் விளையாடியுள்ள யூசப் பதான் 3204 ரன்களை குவித்தது மட்டுமின்றி பல விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் 38 வயதான அவர் வயது மூப்பின் காரணமாக 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐபிஎல் அணியிலும் ஏலம் போகாமல் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றாலும் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் காரணமாக தற்போது புதிய கிரிக்கெட் தொடரில் விளையாட தனது பெயரை பதிவு செய்துள்ளார். இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

lpl 1

அதன்படி இலங்கையில் நடைபெறும் இலங்கை பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசனில் தான் விளையாட விருப்பம் உள்ளதாக தனது பெயரை ஏலத்திற்கு யூசப் பதான் பதிவு செய்துள்ளார். ஒருவேளை அவர் எந்த அணியிலாவது ஏலம் எடுக்க பட்டால் அவர் நிச்சயம் அந்த தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக யூசப் பதான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement