எப்படிபட்ட வீரர்களை கொடுத்தாலும் ஜெயிக்கவைக்கும் இவரே ஐ.பி.எல் வரலாற்றின் சிறந்த கேப்டன் – யூசப் பதான் அதிரடி கருத்து

Yusuf-2
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் இவர்தான் என தோனியை தாண்டி வேறு ஒருவரை கை காட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று கோப்பைக்காக மோதி வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற ஐ.பி.எல் 13 ஆவது சீசனாக இந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் காலவரையறையின்றி பி.சி.சி.ஐ ஒத்திவைத்துள்ளது.

- Advertisement -

இதில் கடந்த 12 சீசன்கலாக தொடர்ச்சியாக ஒரே கேப்டனை கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். மேலும், ஆடிய அனைத்து சீசன் களிலும் தனது அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றவர் தோனி ஒருவர் மட்டுமே. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் யார் என்பதை யூசப் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட போது மற்ற அணிகள் எல்லாம் நட்சத்திர வீரர்களை வளைத்துப் போட்டு தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டு இருந்தன. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செலவு செய்ய யோசித்து சரியான வீரர்களை மட்டுமே களமிறக்கியது. அந்த அணி எடுத்ததிலயே ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே தான் மிகச்சிறந்த அனுபவ வீரர்.

Yusuf

அவரையே கேப்டனாக நியமித்து 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வைத்தார். மூன்று ஆண்டுகளுக்கு அவருக்கு கீழே ஆடினேன். அவர் போட்டிக்கு முன்னதாகவே ஒவ்வொரு அணியையும் எப்படி வீழ்த்த வேண்டும் என்பதை எங்களுக்கு சரியாக சொல்லிக் கொடுப்பார். அதனைப் போலவே நாங்களும் செய்வோம் .

- Advertisement -

அனுபவ வீரர்கள் இல்லாமலேயே 2008 ஆம் ஆண்டு எங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று கோப்பையை வெல்ல வைத்தார் வார்னே. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் வீரர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களை வைத்தே கோப்பையை வெல்ல அவரால் மட்டும்தான் முடியும். அவர்தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார் யூசுஃப் பதான்.

Yusuf 1

யூசப் பதானின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆரம்பகாலகட்டத்தில் விளையாடியதால் ஷேன் வார்னேவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகினறனர். யூசப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக 37 பந்துகளில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement