ரசிகர்களை மிரளவைத்த யூசுப் பதானின் அற்புத கேட்ச் – வைரலாகும் வீடியோ

Yusuf

இந்தியாவில் தற்போது சையது முஷ்டாக் அலி தொடர் நேற்று துவங்கியது. இதில் இந்தியாவால் சேர்ந்த பல்வேறு மாநிலங்களும் கலந்துகொள்கிறது. இதில் நேற்றைய போட்டியில் பரோடா மற்றும் கோவா ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் யூசுப் பதான் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் 36 வயதான யூசப் பதான் பீல்டிங் செய்யும்போது செம டைவ் அடித்து ஒரு கேட்ச் பிடித்தார். இந்தக் கேட்ச்சை தற்போது அவரது தம்பியும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இது பறவை அல்ல யூசப் பதான் அவர்களது கடின உழைப்புக்கு பலன் தான் இந்த கேட்ச் என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூசுப் பதான் இந்திய அணிக்காக 2007ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான கிரிக்கெட் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.