நான் பாகிஸ்தான் அணிக்காக செய்த இந்த தப்பால் தான் கேப்டன் பதவி பறிபோனது – 11 ஆண்டு ரகசியத்தை உடைத்த யூனிஸ் கான்

Younis
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதி வெற்றி பெற்றது. அதற்கு பின்னர் இரண்டாவது உலக கோப்பை 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது. அப்போது கேப்டனாக இருந்தவர் யூனிஸ்கான்.

Younis 1

- Advertisement -

இவர் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மேலும் பாகிஸ்தான் அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் விளாசிய வரும் இவரே 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10,099 ரன்களை விளாசியுள்ளார். அதேநேரத்தில் 265 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7749 ரன்களையும் விளாசியுள்ளார்.

பாகிஸ்தான் அணி உருவாக்கிய சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனுமான இவரின் தலைமையில் தான் 1992 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. அப்போது கேப்டனாக இருந்தவர் யூனிஸ்கான். ஆனால் கோப்பையை வென்ற ஆறே மாதத்தில் அவர் கேப்டன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

Younis 2

இந்நிலையில் 11 ஆண்டுகள் கழித்து தான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து தூக்கி எறிய பட்டார் என்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது : உண்மையை பேசுபவர்களை எப்போதும் உலகம் மதிக்காது. பைத்தியக்காரனை போல் பார்க்கும். நான் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சரியாக நடந்து கொண்டேன்.

- Advertisement -

நாட்டிற்காக உண்மையாக இல்லாத ஒரு சில வீரர்களை சுட்டிக் காட்டினேன் இதுதான் எனது தவறு. இதனால்தான் எனது கேப்டன் பதவி பறிபோனது என்று கூறியுள்ளார் .இந்த பட்டியலில் சாகித் அப்ரிடி, வகாப் ரியாஸ் போன்ற பல வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. இவரின் இந்த கருத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் குவிந்து வருகிறது.

எப்போதும் சூதாட்ட பிரச்சனையில் சிக்கி சர்ச்சைகளின் மையமாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியில் சில நல்ல வீரர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவராக யூனிஸ் கான் பார்க்கப்படுகிறார். மேலும் உலகளவில் ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement