சீனியர் வீரர்களுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பிடிக்க போகும் இளம் வீரர்கள் இவர்கள்தான் – விவரம் இதோ

pandya

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ferguson

இந்தத் தொடரில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது தவான், விஜய் சங்கர், பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் மற்றும் ராகுல் தொடக்க வீரராக களம் போகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராகுலுக்கு சில போட்டியில் ஓய்வு அளித்து அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் மேலும் கோலி விளையாட வில்லை என்றால் சுப்மான் கில் அந்த இடத்தில் விளையாடுவார்.

மேலும் மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. தோனிக்கு பதிலாக பண்ட் கீப்பராக விளையாடுவார். அதேபோன்று அக்சர் பட்டேல் அல்லது க்ருனால் பாண்டியா ஆகியோரும் அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

iyer

மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான சைனி மற்றும் கலீல் அகமது, தீபக் சாகர் ஆகியோரும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதால் இந்திய அணி மொத்தமாக தலைகீழாக இத்தொடரில் ஆடப்போகிறது என்று என்பது மட்டும் உறுதி.

Advertisement