இவங்க 3 பேரும் ஆடுறத பாத்தா ஒன்டே மேட்ச் ஆட வந்த மாதிரியே இல்லையே – நடுங்கிய இலங்கை பவுலர்கள்

Ishan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்தது. பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 263 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

- Advertisement -

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களிலேயே 58 ரன்கள் குவித்தனர். அதன் பின்னர் ஷிகார் தவான் பொறுமையாக விளையாட அவருடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் அடித்து நொறுக்கினார். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே என வந்தவர்கள் யாவரும் அதிரடியாக விளையாடிய இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை 37 ஓவர்களில் முடிக்க முடிந்தது.

குறிப்பாக இந்திய அணியின் மூன்று பேட்ஸ்மேன்களான ப்ரித்வி ஷா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டத்தை பார்த்து இலங்கை பந்துவீச்சாளர்கள் நடுங்கி விட்டனர் என்றே கூறலாம். ஏனெனில் துவக்க வீரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா 24 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை குவித்தார்.

ishan 1

அதே போன்று தனது முதலாவது அறிமுகப் போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர் என 59 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் தான் சந்தித்த முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கு அடித்த இஷான் கிஷன் பட்டையை கிளப்பினார். மேலும் சூரியகுமார் யாதவும் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களை குவித்தார்.

ishan 2

இவர்கள் மூவரும் ஒருநாள் கிரிக்கெட் ஆடுவதை பார்த்தல் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக விளையாடியதால் இலங்கை பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு கட்டத்திலும் அவர்களுக்கு நெருக்கடியை அளிக்க முடியவில்லை. மேலும் அவர்களது பேட்டிங்கை பார்த்து இலங்கை பவுலர்கள் ஸ்தம்பித்து நின்றனர் என்றே கூறலாம். போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் தவான் இளம் வீரர்களை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement