நாட்டுக்காக யுவராஜ் உயிரையே விட்ருந்தா கூட பெருமைப்படிருப்பேன்.. ஆனா கிரேட்டாக வரராது ஏமாற்றம்.. யோக்ராஜ்

Yograj Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உலகக்கோப்பை நாயகனாக அறியப்படுகிறார். அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வெல்வதற்கும் முக்கிய பங்காற்றினார். அதை விட 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

முன்னதாக 2011 உலகக் கோப்பையின் போது யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அதை வெளியில் சொல்லாமல் நாட்டுக்காக தொடர்ந்து விளையாடிய யுவராஜ் சிங் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக சென்னையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் சதத்தை அடித்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

உயிரே போனாலும்:

சென்னையில் நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் மிகவும் தடுமாறிய அவர் அதையும் தாண்டி நாட்டுக்காக விளையாடியதை மறக்க முடியாது. இந்நிலையில் ஒருவேளை புற்றுநோயால் மைதானத்திலேயே தம்முடைய மகன் யுவராஜ் சிங் உயிரை விட்டிருந்தால் அதற்காக தாம் பெருமைப்படுவேன் என்று அவருடைய தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் நாட்டுக்காக களத்தில் உயிரை விடுவது பெருமையான விஷயம் என்று அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் தாம் நினைத்த அளவுக்கு யுவராஜ் சிங் மகத்தான வீரராக வரவில்லை என்றும் அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நாட்டுக்காக புற்றுநோயால் யுவராஜ் உயிரை நீத்து இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தால் நான் பெருமை மிகுந்த அப்பாவாக இருந்திருப்பேன். இப்போதும் பெருமை மிகுந்தவராகவே இருக்கிறேன்”

- Advertisement -

கிரேட் கிரிக்கெட்டர் இல்ல:

“இதை என்னுடைய பையனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளேன். அவர் மோசமான நிலையில் விளையாடிய போது கூட “கவலைப்படாதீர்கள். நீங்கள் இறக்க மாட்டீர்கள். இந்த உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வெல்லுங்கள்” என்று அவரிடம் சொன்னேன். அதே சமயம் தன்னுடைய தந்தையைப் போல் யுவராஜ் சிங் 10% உழைத்திருந்தால் அவர் கிரேட் கிரிக்கெட்டராக வந்திருப்பார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால், பண்ட், கில் ஆகிய 3 பேரும் இங்கிலாந்து டி20 அணியில் இடம்பெறாததுக்கு – காரணம் இதுதான்

அவர் கூறுவது போல ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் அபாரமாக விளையாடி ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு அசத்தினார். ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் சிங் மகத்தான ஆட்டங்களை வெளிப்படுத்தியதில்லை. அதையும் செய்திருந்தால் யுவராஜ் இன்னும் மகத்தான கிரிக்கெட்டராக வந்திருப்பார் என்று அவருடைய தந்தை ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement