இந்திய அணியின் வீரரான இவரைப்போல ஒரு கேப்டன் பாகிஸ்தானுக்கு வேண்டும் – பரபரப்பை ஏற்படுத்திய பாக் வீரர்

Arafat
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான யாசிர் அராஃபத் கடந்த 2000மாவது ஆண்டு அறிமுகமாகி 2012 வரை பாகிஸ்தான் அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 11 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டராக விளையாடிய யாசீர் அரபாத் தற்போது பாகிஸ்தான் அணிக்கு திறமையான ஒரு கேப்டன் வேண்டுமென்றும் வீரர்களிடம் இருந்து சரியான திறமையை வெளிக்கொணர வைக்கும் ஒரு கேப்டன் வேண்டுமென்றும் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

arafat 1

- Advertisement -

இதுகுறித்து அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போது விளையாடுவதில்லை. ஒருவேளை அவர் ரிட்டயர் ஆகாமல் விளையாடிக் கொண்டிருந்தால் நிச்சயம் நான் அவரை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி இருப்பேன். ஏனெனில் இப்போது பாகிஸ்தான் அணி இருக்கும் நிலையில் தோனி போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டன் தேவை. அவரால்தான் நிச்சயம் வீரர்களை சரியாக பயன்படுத்த முடியும்.

எங்களது பாகிஸ்தான் அணியில் சிறப்பான வீரர்கள் இருந்தாலும் தோனியை போன்ற கேப்டனால் தான் வீரர்களின் திறமையை சரியாக வெளிக்கொண்டு வரமுடியும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் : அக்தர் அப்போதெல்லாம் என்னிடம் சொல்வார். டோனிக்கு எதிராக பந்து வீசும் போது இப்படி அடி அடிப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று. அந்த அளவிற்கு தோனி உடல் அளவிலும் மனதளவிலும் வலிமையானவர்.

Dhoni-1

ஒருநாள் போட்டிகளில் தோனியை மிஞ்ச ஆளில்லை. அவரது பினிஷிங் விஷயத்திலும் யாராலும் அவரை நெருங்கக் கூட முடியாது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 ரன்கள் சராசரி வைத்திருக்கும் அவர் எப்பேர்ப்பட்ட வீரர் என்பதை அந்த புள்ளிவிவரங்களை உணர்த்தும். அவரைப் போன்ற ஒரு வீரர் பாகிஸ்தான் அணிக்கு தேவை என்று கூறியுள்ளார்.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

சமீப காலமாகவே பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியையும், இந்திய அணி வீரர்களையும் புகழ்ந்து பேசி வரும் வேளையில் தற்போது தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஆக்கியிருப்பேன் என்று யாசிர் அராபத் பேட்டி அளித்து பரபரப்பை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement