சேவாக்கின் ஆல் டைம் ரெக்கார்டை சச்சின், கோலி மாதிரி திறமையான ஜெய்ஸ்வால் தான் உடைப்பாரு.. கைப் கணிப்பு

Mohammed Kaif
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் 518/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் 2வது நாள் முடிவில் 141/4 ரன்கள் எடுத்து தடுமாற்றமாகவே பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்கு களத்தில் இம்லச் 14, ஷா ஹோப் 31* எடுத்து நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

திறமையாக ஜெய்ஸ்வால்:

முன்னதாக இப்போட்டியில் ஜெய்ஸ்வால் தன்னுடைய 7வது சதத்தை அடித்து அசத்தினார். இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2023ஆம் ஆண்டு அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அடுத்ததாக இங்கிலாந்தை சொந்த மண்ணில் வெளுத்து வாங்கிய அவர் 750+ ரன்கள் குவித்து 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அத்தொடரில் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் 2 சதங்கள் அடித்த அவர் இதுவரை 25 போட்டிகளில் 3390 ரன்களை 49.89 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார்.

- Advertisement -

சேவாக்கின் சாதனை:

இந்நிலையில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போல ஜெய்ஸ்வால் சீராக பெரிய ரன்களை திறமையைப் பெற்றுள்ளதாக முன்னாள் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமையும் பெற்றுள்ள அவர் அதிகபட்ச ஸ்கோர் (319) அடித்த இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக்கின் சாதனையை உடைப்பார் என்றும் ஃகைப் கணித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: பாலோ ஆனில் இருந்து தப்பிக்க வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எத்தனை ரன்கள் தேவை – தப்பிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

“யசஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய சதங்கள் அடிப்பதற்கான பொறுமையைக் கொண்ட ஒரு புதிய குறியீடுகளை உருவாக்கக்கூடிய பேட்ஸ்மேன். தன்னுடைய முதல் 26 போட்டிகளில் சச்சின், விராட் போலவே அவருடைய நம்பர்களும் நன்றாக இருக்கிறது. அத்துடன் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கும் அவருடைய பெரும்பாலான சதங்கள் இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறது. சேவாக்கின் 300 ரன்கள் சாதனையை ஜெய்ஸ்வால் தான் உடைப்பார்” என்று கூறியுள்ளார்.

Advertisement