- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின் தான் எனக்கு இந்த வித்தையை கற்றுக்கொடுத்தார். இளம்வீரர் பகிர்ந்த செய்து – விவரம் இதோ

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றது கோப்பையை வெல்ல வில்லை என்றாலும் அந்த அணியில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகி உள்ளனர்.

குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் யாஷ்வி ஜெய்ஸ்வால் அற்புதமாக தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே மும்பை அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வரும் இவருக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது

- Advertisement -

இது குறித்து பேசிய யாஷ்வி ஜெய்ஸ்வால்: நான் பேட்டிங் பிடிக்கச் செல்லும்போது சச்சின் டெண்டுல்கரை பற்றி நினைத்து விட்டு தான் செல்வேன். அவர் எனக்கு அற்புதமான அறிவுரையை கூறினார். பேட்டிங் பிடிக்கும் போது எப்படி கால்களை நகர்த்தி ஆட வேண்டும் எனவும் ,ஆடுகளத்தின் தன்மையை எவ்வாறு கண்டறிந்து அதற்கேற்றவாறு ஆட வேண்டும் எனவும் எனக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

இது எனக்கு உலக கோப்பை தொடரில் மிகவும் உதவியது இவ்வாறு பேசினார் ஜெய்ஸ்வால்.
உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் ஆடியுள்ள யாஷ்வி ஜெய்ஸ்வால் 400 ரன்கள் குவித்துள்ளார் இதன் சராசரி 133.33 ஆகும்.

- Advertisement -
Published by