கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2023-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய டி20 அணியிலும், டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு 2025-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாட இடம் கிடைத்தது. அதன் காரணமாக இந்தியாவின் எதிர்கால நட்சத்திர வீரராக இவர் பார்க்கப்படுகிறார்.
மும்பை அணியிலிருந்து கோவை அணிக்கு தாவும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :
அந்த வகையில் இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 19 டெஸ்ட் 23 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 56 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 23 வயதே ஆன இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரரான அவர் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தினை ஏற்கனவே பிடித்து விட்டார்.
அதேபோன்று டி20 அணியிலும் தொடர்ந்த இடம் பிடித்து வரும் அவர் விரைவில் இந்திய ஒருநாள் அணியிலும் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவிற்கு மிக திறமையான வீரராக பார்க்கப்படுகிறார். அண்மையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் 5 போட்டிகளில் விளையாடி 44 சராசரியுடன் 1 சதம் மற்றும் 2 அரைசதம் என 391 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் மும்பை அணிக்காக அண்மையில் ரஞ்சி கோப்பையில் விளையாடிய ஜெய்ஸ்வால் தற்போது மும்பை அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். அதன்படி மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு ஜெய்ஸ்வால் அனுப்பிய மெயில் ஒன்றில் :
“தனக்கு கோவா அணிக்காக விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்” என்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் மும்பை அணியில் தொடர முடியாது எனவே கோவா அணிக்கு விளையாட விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மும்பை கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுமதியோடு அவர் இந்தாண்டு முதல் கோவா அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ரோஹித் ஏன் இப்படி பன்றாரு.. இதை செஞ்சா ஈஸியா ஆரஞ்சு தொப்பியை வெல்லலாம்.. சேவாக், திவாரி அதிருப்தி
ஏற்கனவே அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லாடு போன்றோர் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடிவந்த வேளையில் அங்கு இடம் கிடைக்காமல் கோவா அணிக்கு சென்ற நிலையில் தற்போது மூன்றாவது மும்பை வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கோவா அணிக்கு மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



