அது 2 விதமா வந்துச்சு.. ஜிம்பாப்பேவை ஈஸியா வீழ்த்திய என்னோட திட்டம் இது தான்.. ஜெய்ஸ்வால் பேட்டி

Jaiswal
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜூலை 13ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் போராடி 152/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 46 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 93* ரன்களும் கேப்டன் சுப்மன் கில் 58* ரன்களும் எடுத்து 15.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக எளிதான வெற்றி பெற்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் கடைசி போட்டிக்கு முன்பாகவே இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. குறிப்பாக முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியாவை வெற்றி பெற வைத்த இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்:
இந்த வெற்றிக்கு 13 பவுண்டரி 2 சிக்சருடன் 93* (53) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் புதிய பந்து வேகமாக வந்ததாக ஜெயஸ்வால் கூறியுள்ளார். அதுவே பழையதானதும் மெதுவாக வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அந்த 2 விதமான பந்துகளையும் கணித்து தாம் விளையாடியதாக ஜெயஸ்வால் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று என்னுடைய பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்தேன். எதிரணியின் வெவ்வேறு பவுலர்களுக்கு எதிராக நான் திட்டங்களை வைத்துள்ளேன். பந்து புதியதாக இருந்த போது நன்றாக வந்தது. ஆனால் அது பழையதாக மாறியதும் மெதுவாக வந்தது. எனவே அதை நான் புரிந்து கொண்டு என்னுடைய ஆட்டத்தை மாற்றி விளையாடினேன்”

- Advertisement -

“நானும் கில்லும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினோம். ஆரம்பத்தில் நான் அதிரடியாக விளையாடினேன். அதன் பின் ஸ்ட்ரைக்கை மாற்றி கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுக்க விரும்பினேன்” என்று கூறினார். அந்த வகையில் இத்தொடரின் முதல் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்பே அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

அதற்காக இந்திய அணி கிண்டல்களையும் சந்தித்தது. ஆனால் அங்கிருந்து அசத்தலாக விளையாடிய இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி ஜூலை 14ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தப் போட்டியிலும் இளம் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement