3 போட்டிகள்.. சச்சினின் 14 வருட மாபெரும் வரலாற்று சாதனையை உடைக்க ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Jaiswal 2
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்ததாக அடிலெய்ட் நகரில் பகல் இரவு போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற இந்திய அணி தயாராகி வருகிறது.

அந்தப் போட்டியிலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவதற்காக தயாராகி வருகிறார். குறிப்பாக முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு விளையாடிய ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஃபார்மில் ஜெய்ஸ்வால்:

அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரராகவும் அவர் சாதனை படைத்தார். இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்தார். அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

அந்த வகையில் இந்த வருடம் அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 3 சதங்கள் உட்பட 1280* ரன்களை குவித்துள்ளார். இன்னும் அவர் இந்த வருடம் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அந்த 3 போட்டிகளில் இன்னும் 282 ரன்களை குவித்தால் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை உடைத்து புதிய சாதனை படைப்பார்.

- Advertisement -

பொன்னான வாய்ப்பு:

இதற்கு முன் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 1562 ரன்களை குவித்து அந்த சாதனையை தன் வசம் வைத்துள்ளார். எனவே தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் அந்த சாதனையை உடைப்பதற்கான பொன்னான வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார். ஆனால் அதற்கு 3 போட்டிகளிலும் சராசரியாக 100 ரன்கள் குவிப்பது அவசியமாகிறது.

இதையும் படிங்க: 37/0 டூ 57 ஆல் அவுட்.. ஜிம்பாப்வே மோசமான வரலாற்று சாதனை.. மீண்டும் வீரத்தை காட்டிய பாகிஸ்தான்

அதனால் சச்சினின் சாதனையை ஜெய்ஸ்வால் கொஞ்சம் உடைப்பது கடினமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் சச்சினை முந்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சொல்லப்போனால் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற நியூஸிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம் உலக சாதனையை ஜெய்ஸ்வால் கடந்த போட்டியிலேயே உடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement