இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். மிக இளம் வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமான அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் அற்புதமாக பயன்படுத்தி தற்போது 22 வயதிலேயே இந்திய அணியின் அடுத்த நட்சத்திர ஆட்டக்காரராக வளர்ந்து நிற்கிறார்.
அற்புதமான சாதனையை நிகழ்த்திய ஜெய்ஸ்வால் :
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் மற்றும் டி20 என இரண்டு வடிவத்திலும் கலக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுடன் தற்போது துவக்க வீரராக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி அவர் ஏமாற்றம் அளித்திருந்தார்.
இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 297 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 161 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றிலும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி முதல் 15 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக அவர் தற்போது முதல் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : 201 ரன்ஸ்.. ஆஸியை பந்தாடிய ஜெய்ஸ்வால் – ராகுல் ஜோடி.. கவாஸ்கர் – ஸ்ரீகாந்தை முந்தி 38 வருட சாதனை
இதுவரை 15 சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 1568 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதில் நான்கு சதம் மற்றும் எட்டு அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



