கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் மூலம் மோசமான சாதனைக்கு ஆளான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Yashasvi Jaiswal
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி :

மோசமான சாதனைக்கு ஆளான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் :

தங்களது முதல் இன்னிங்சில் 159 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது முதல் இன்னிங்சில் 189 ரன்கள் குவித்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸின் போது 153 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 93 ரன்களுக்கே சுருண்டது.

அதன் காரணமாக இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அவர் வெறும் 12 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்தது பலரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 12 ரன்களின் மூலம் மோசமான ஒரு சாதனைக்கு ஆளாகியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதுவே டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த குறைந்த ஸ்கோராக இருந்து வந்தது.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட நிதீஷ் ரெட்டி – என்ன காரணம்?

இவ்வேளையில் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 12 ரன்கள் மட்டுமே அடித்து அந்த மோசமான சாதனையை தகர்த்து மேலும் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி கொல்கத்தா மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டாகிய அவர் இந்திய மண்ணில் தனது முதல் டெஸ்ட் டக் அவுட்டையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement