வெ.இ மட்டுமல்ல ஆஸி இங்கிலாந்திலும் விளையாட ஜெய்ஸ்வால் ரெடியா இருக்காரு, காரணம் இது தான் – முன்னாள் வீரர் பாராட்டு

Yashasvi-Jaiswal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கியுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் பயணத்தை வெற்றிகரமாக துவங்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட புஜாராவுக்கு பதில் இந்த போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

Jaiswal IND vs WI

- Advertisement -

மும்பையை சேர்ந்த அவர் 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்று ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற 3 விதமான உள்ளூர் தொடர்களிலும் சதங்களை அடித்து ஐபிஎல் 2023 தொடரில் உச்சகட்டமாக ஒரு சீசனில் அதிக ரன்கள் (625) குவித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்று ஆல் டைம் வரலாற்றையும் படைத்தார். அதன் காரணமாக இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தம்முடைய கேரியரை துவங்கினார்.

வெளிநாடுகளுக்கும் ரெடி:
மேலும் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான மதிப்பளித்து நிதானமாக விளையாடிய அவர் எந்த இடத்திலும் எட்ஜ் கொடுக்காமல் தெளிவான பேட்டிங்கை வெளிப்படுத்தி 387 பந்துகள் எதிர்கொண்டு 16 பவுண்டரி 1 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து சௌரவ் கங்குலி, முகமது அசாருதீன் போன்ற முன்னாள் வீரர்களின் சாதனைகளையும் தகர்த்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அசத்தியுள்ள அவரால் சவாலான எதிரணிகளுக்கு எதிராக அழுத்தமான பெரிய போட்டிகளில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி காணப்படுகிறது.

இந்நிலையில் பெரும்பாலும் கவர் டிரைவ் அடிக்காமல் ஃபுல், கட் ஷாட்கள் வாயிலாக பவுண்டரி அடிப்பதன் காரணமாக ஜெய்ஸ்வால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஸ்விங் வேகத்துக்கு சாதகமான வெளிநாடுகளிலும் அசத்துவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் இந்திய வீரர் இஷாந்த் சர்மா பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஸ்விங் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் எட்ஜ் வாங்கி கீப்பர் அல்லது ஸ்லிப் பகுதிகளில் நிற்கும் ஃபீல்டர்களிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி செல்வது வழக்கமாகும்.

- Advertisement -

சொல்லப்போனால் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலி இவ்வளவு பெரிய ஜாம்பவானாக உருவெடுத்தும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வரும் பந்துகளை வம்படியாக சென்று கவர் டிரைவ் அடிக்க முயற்சித்து அவுட்டாகி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அதை ஆரம்ப காலங்களிலேயே தவிர்த்து விளையாட பழகியுள்ள ஜெய்ஸ்வால் வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியும் என்று தெரிவிக்கும் இசாந்த் சர்மா இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

Ishanth-1

“என்னைப் பொறுத்த வரை அவர் முழுவதுமாக தயாராகியுள்ளார். ஏனெனில் இந்த இன்னிங்சிலேயே குறிப்பாக புதிய பந்துக்கு எதிராக அவர் அடித்த அனைத்து பவுண்டரிகளும் கட் அல்லது ஃபுல் வாயிலாக வந்துள்ளது. அந்த வகையில் ஃபுல் லென்த் பந்துகளை கவர் டிரைவ் அடிக்காமல் இருப்பது ஒரு தொடக்க வீரரின் வருங்காலமான பிரகாசத்திற்கு நல்ல அறிகுறியாகும். ஏனெனில் நீங்கள் கவர் டிரைவ் அடிக்கும் போது ஸ்லிப் பகுதிகளில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க:இந்திய ரசிகர்கள் மாதிரி மோசமானவங்கள பாக்கவே முடியாது, 2005 நிகழ்வை சுட்டி காட்டிய ஷாஹித் அப்ரிடி – காரணம் என்ன?

“ஆனால் ஜெய்ஸ்வால் பெரும்பாலும் புதிய பந்துக்கு எதிராக ஃபுல் மற்றும் கட் ஷாட்களை அடிக்கவே முயற்சித்தது அவருடைய பலமாகும். மேலும் பிட்ச்சாகி வரும் சுமாரான பந்தையும் அவர் ஒன்று முழுமையாக விட்டார் அல்லது முழு பவர் கொடுத்து அடித்தார். இது தான் ஒரு தொடக்க வீரருக்கு தேவையான முக்கிய அம்சமாகும்” என்று கூறினார்.

Advertisement