- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை 10 நாள் முன்னாடியே என்கிட்ட சொன்ன ரோஹித் பாய் பற்றி.. சொல்ல வார்த்தையில்லை.. ஜெய்ஸ்வால் பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்போதிலிருந்து சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்திய டெஸ்ட் அணியில் நிலையான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்.

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் சமீபத்தில் சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால் 2023 ஆசிய டி20 போட்டிகளில் காலிறுதியில் சதமடித்து இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல உதவினார். அதனால் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் சதமடித்த 6 வீரர்களில் ஒருவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்காக தமக்கு அறிமுகமாகும் வாய்ப்பை அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

10 நாட்கள் முன்பே:

அதை 10 நாட்கள் முன்பாகவே தம்மிடம் சொன்ன ரோஹித் சர்மா அறிமுகப் போட்டியில் தடுமாறக்கூடாது என்பதற்காக நிறைய ஆதரவுகளைக் கொடுத்ததாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அப்படி அண்ணனைப் போல ஆதரவைக் கொடுத்த அவரைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்றும் ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கிட்டத்தட்ட 15 நாட்கள் முன்பாகவே நான் அறிமுகமாக களமிறங்கப் போகிறேன் என்பதை ரோஹித் என்னிடம் சொன்னார். ஒரு நாள் முன்பு அல்ல 15 நாட்கள் முன்பே நீ விளையாடப் போகிறாய் என்று சொல்கிறேன் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார். எனவே உனக்கு நீயே தயாராகிக் கொள். நாம் சேர்ந்து முறையாக தயாராகும் என்றும் ரோஹித் பாய் சொன்னார்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி:

“அதுவே அவருடைய சிந்தனை செயல்முறையாக இருந்தது. அப்படிப்பட்ட ரோஹித் பாய் பற்றி நான் என்ன சொல்வது? நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அவரைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மூத்த சகோதரரைப் போன்ற அவர் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார், ஊக்கமளிப்பார். விராட் பாஜி, ரோஹித் பாய், ஹர்டிக் பாய் போன்றவர்களுடன் விளையாடுவது பல வீரர்களுக்கு கனவாக இருக்கும்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.. ஆனா துணை கேப்டன் யார் தெரியுமா? – வெளியான தகவல்

“ஏனெனில் அவர்கள் எங்களுக்கு இந்திய கிரிக்கெட்டை பற்றி கற்றுக் கொடுக்கிறார்கள். அதை நாங்கள் கவனித்து முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் கொடுக்கும் அனுபவத்தை வைத்து எங்களது சொந்த வழியில் அணிக்காக சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, ஜெயஸ்வால் ஆகியோர் புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -