100% செஞ்சா எந்த வேலையும் சிறியதல்ல.. பானிபூரி விற்க உதவிய பின்னணி பற்றி.. ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மும்பை வந்தார். அங்கே தம்முடைய பானிபூரி விற்கும் மாமா தங்கியிருந்த சிறிய கூடாரத்தில் ஜெய்ஸ்வாலும் தங்கி கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கினார். விளையாடிய நேரம் போக அவர் தம்முடைய மாமா பானிபூரி விற்பதற்காக உதவிகளையும் செய்தார்.

அதற்கிடையே மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ஜெய்ஸ்வால் உள்ளூரில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பெரிய ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பட்டைய கிளப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

பானிபூரி விற்ற கதை:

மேலும் டி20 கிரிக்கெட்டில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதமடித்த அவர் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல உதவினார். இருப்பினும் அதிகப்படியான போட்டி காரணமாக அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தம்முடைய மாமாவுடன் சேர்ந்து பானிபூரி விற்ற தருணங்களை ஜெய்ஸ்வால் பகிர்ந்துள்ளார்.

அப்போது 100% பங்களிப்பை கொடுத்தால் எந்த வேலையும் சிறிதல்ல என்று உணர்ந்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் என்னுடைய மாமாவுடன் நான் இருப்பேன். அங்கே முஸ்லிம் யுனைடெட் என்ற கிளப் பகுதியில் கூடாரத்தில் தங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது”

- Advertisement -

பகிர்ந்த ஜெய்ஸ்வால்:

“அங்கிருந்து சிறப்பாக விளையாட முயற்சித்தேன். அங்கே நல்ல செயல்திறனை வெளிப்படுத்திய போது அவர்கள் எனக்குத் தங்குவதற்கான வாய்ப்பை வழங்கினர். அங்கிருக்கும் மக்கள் என்னுடைய குடும்பமானார்கள். அவர்கள் சமையல் செய்வதற்கு அல்லது வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதை நான் செய்வேன். அதனால் அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க உதவுவேன்”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடரில் நிச்சயம் அபிஷேக் சர்மா இதை செய்வாரு – ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து

“இதுவே என்னுடைய ஆரம்பகால வாழ்க்கையாக இருந்தது. அது எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் 100% முயற்சியை கொடுக்கும் போது சிறியது கிடையாது என்ற பாடத்தையும் எனக்குக் கற்பித்தது. அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே 10 – 15 நிமிடங்கள் பேசுவேன். அது எனக்கு கவனத்துடன் இருக்க உதவுகிறது. நன்றாக விளையாடும் போது எனக்கு நானே பாராட்டி அடுத்த சவாலுக்குத் தயாராகவேன். அதே சமயம் அணிக்குத் தேவையானதை மட்டும் செய்து நீ கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், அதீத தன்னம்பிக்கை ஆபத்தில் முடியும் என்று சொல்லிக் கொள்வேன்” எனக் கூறினார்.

Advertisement