- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில் உங்களின் சதத்தை தடுத்தாரா? ரசிகர் கேட்ட கேள்விக்கு ஜெய்ஸ்வால் நேராக பதில்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. முன்னதாக அந்த தொடரில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஏனெனில் இத்தொடரில் அறிமுகமாகி இரண்டாவது போட்டியில் சதமடித்த அபிஷேக் சர்மா இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

ஆனால் 3வது போட்டியில் ஜெய்ஸ்வால் வந்ததால் அவரை கில் 3வது இடத்தில் களமிறக்கியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் உள்ளூர் முதல் ஐபிஎல் வரை துவக்க வீரராகவே விளையாடி அசத்திய அபிஷேக் ஷர்மா 3வது இடத்தில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட இளம் வீரரான அவருக்கு கேப்டனாக பெருந்தன்மையுடன் தனது ஓப்பனிங் இடத்தை கில் கொடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் பதில்:
அதே போல 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 83 ரன்களில் இருந்த போது இந்தியாவுக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அவரை சதமடிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் அதை செய்யாமல் ஸ்ட்ரைக்கை தன் பக்கமே வைத்து தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். அதனால் கில் மிகவும் சுயநலமாக செயல்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசினர்.

இந்நிலையில் 4வது போட்டியில் கில் உங்களை சதமடிக்க விடவில்லையா? என்று ஒரு ரசிகர் நேரடியாகவே ஜெய்ஸ்வாலிடம் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “சுப்மன் கில்லுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் விளையாடிய அனுபவம் நன்றாக இருந்தது. இந்தியாவுக்காக நான் விளையாடும் போதெல்லாம் அதை பெருமையாக உணர்வேன்”

- Advertisement -

“அந்தப் போட்டியில் நாங்கள் ஃபினிஷிங் செய்து அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுப்பதை பற்றி சிந்தித்தோம். அதனால் விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே எங்களுடைய மனதில் இருந்தது” என்று கூறினார். அதாவது தாமும் சதத்துக்காக விளையாடவில்லை அதை கில்லும் தடுக்கவில்லை என்று ஜெய்ஸ்வால் மறைமுகமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரோஹித் பாய் பாத்து தான் இதை செய்றேன்.. இப்போ தான் என்னோட சிறந்த செயல்பாடு வெளியே வருது.. கில் பேட்டி

மேலும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற தமக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய செயல்முறையை மகிழ்ச்சியாக பின்பற்றும் நான் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தேன். அத்தொடரில் மிகவும் ஆர்வமுடன் இருந்த நான் வாய்ப்பு கிடைக்கும் போது எனது சிறந்தவற்றை கொடுக்க முயற்சிப்பேன். எப்போதும் எனது அணியின் வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -