- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கொண்டாட்ட முத்தம் ரசிகர்களுக்கு.. என்னோட அந்த கதை எல்லாத்தையும் சமாளிக்க உதவுது.. ஜெய்ஸ்வால் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1 – 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா மீண்டு வந்தது.

அந்த வெற்றிக்கு கேப்டன் பும்ரா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் முக்கிய பங்காற்றினார்கள். அவர்களை விட இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் அப்போட்டிகள் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு அபாரமாக விளையாடி 161 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அசத்திய ஜெய்ஸ்வால்:

அதனால் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக சாதனையும் படைத்தார். முன்னதாக பெரும்பாலான வீரர்கள் சதத்தை அடிக்கும் போது தங்களுடைய ஹெல்மெட்டையும் பேட்டையும் உயர்த்தி கொண்டாடுவது வழக்கமாகும். ஆனால் ஜெயஸ்வால் மிகவும் வித்தியாசமாக தம்முடைய கைகளால் முத்தமிட்டு அதை மேலே காற்றில் பறக்க விட்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தம்முடைய இளம் வயதில் சந்தித்த சவாலான காலங்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளையும் சமாளித்து விளையாடுவதற்கான உத்வேகத்தை கொடுத்துள்ளதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் என்னுடைய சதத்தை அப்படி கொண்டாடுவது கொஞ்சம் வித்தியாசமானது. எனது மனதில் இதை செய்யலாமா அல்லது அதை செய்யலாமா என்று நினைத்து வைத்திருந்தேன்”

- Advertisement -

கடவுள், ரசிகர்களுக்கு நன்றி:

“திடீரென அப்படி நடந்த போது கடவுளே நான் என்ன செய்ய வேண்டும் என்பது போல் அப்படி கொண்டாடினேன். சரி இப்படி நாம் கொண்டாடி இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நான் நினைக்கிறேன். நான் அந்த முத்தங்களை என்னை விரும்புபவர்களுக்கும் ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் கொடுக்கிறேன். அவர்களுக்கு என்னுடைய அன்பை முத்தத்தால் கொடுக்க விரும்புகிறேன்”

“இளம் வயதில் மைதான பராமரிப்பாளருடன் நான் சேர்ந்து என்னுடைய சாப்பாட்டுக்காக பானி பூரி விற்றுள்ளேன். அந்த கதை எந்த சூழ்நிலையிலும் போராடி வெல்வதற்கான தன்னம்பிக்கையை எனக்கு கொடுக்கிறது. நான் எப்போதும் போட்டியிட்டு மகிழ்ச்சியுடன் சண்டையிட்டு போட்டியை வெல்ல விரும்புகிறேன். அது எனக்கு கிடைத்ததற்காக பாக்கியவானாக இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடியது”

இதையும் படிங்க: ஐபிஎல் அணிகள் கழற்றிவிட பிரிதிவி தான் காரணம்.. இனிமேல் சர்பராஸ் ரூட் தான் ஒரே வழி.. கைப் விமர்சனம்

“அவற்றால் பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி எனது வாழ்க்கையில் செல்ல முடியும் என்பதை கற்றுக் கொள்கிறேன். இந்த நம்ப முடியாத விஷயங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கும் நான் அதை ஒவ்வொரு பந்திலும் அனுபவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -