- Advertisement -
இந்திய கிரிக்கெட்

லெஜெண்ட்டாக உருவாகி வராரு.. இந்த பையன் வருங்காலத்தில் ஜாம்பவானா வருவாரு.. மனோஜ் திவாரி பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. அதனால் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்தும் நியூசிலாந்துக்கு எதிராகவும் முதல் முறையாகவும் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக சுழலுக்கு சாதகமான புனே மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா 357 ரன்களை துரத்தியது.

அப்போது விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்களும் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தனர். ஆனால் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆனது ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் அதிரடியாக விளையாடி 77 (65) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அவருடைய ஆட்டம் ரசிகர்களால் மட்டுமின்றி மிட்சேல் சான்ட்னர் போன்ற நியூசிலாந்து வீரர்களாலும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

தரமான ஜெய்ஸ்வால்:

இந்நிலையில் இந்திய அணியில் யசஸ்வி ஜெய்ஸ்வால் வருங்காலத்தில் ஜாம்பவானாக உருவெடுப்பார் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பாராட்டும் நம்பிக்கையும் வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் லெஜெண்டாக உருவாகிக் கொண்டிருக்கிறார். அவரை நான் அதிகமாக மதிப்பிடுவேன். ஏனெனில் சிறந்த கிரிக்கெட்டராக வருவதற்கு தேவையான அனைத்தும் அவரிடம் இருக்கிறது”

“அது அவருடைய இந்த இளம் வயதிலேயே நன்றாக தெரிகிறது. அவரிடம் என்ன இருக்கிறது? நல்ல பேட்டிங் டெக்னிக், வெற்றிக்கான பசி, நேர்மறையான மனநிலை ஆகியவை உள்ளன. சூழ்நிலை எதுவாக இருந்தாலும், எதிரணி எதுவாக இருந்தாலும் அவர் தனது அதிரடியான பேட்டிங்கை காண்பிக்கிறார். நீங்கள் நன்றாக சிந்தித்து உங்களிடம் நல்ல டெக்னிக் மற்றும் நிறைய ஷாட்டுகள் இருந்தால் மட்டுமே அந்த டாமினேஷன் வரும்”

- Advertisement -

ஜாம்பவானுக்கான தகுதிகள்:

“அதிலும் புனே பிட்ச்சில் மற்ற மகத்தான வீரர்கள் கூட பெரிய ரன்கள் அடிக்க தடுமாறினார்கள். ஆனால் இந்தப் பையன் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. அவர் கிரிக்கெட்டுக்கு கடவுள் கொடுத்த பரிசு” என்று கூறினார். அவர் கூறுவது போல 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: நீங்க நெனைக்குற மாதிரி ஐ.பி.எல் ஏலம் இருக்காது.. நீங்க தான் அதை புரிஞ்சிக்கனும் – தல தோனி கருத்து

அதனால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் வாய்ப்பு பெற்ற அவர் 2023 சீசனில் அதிவேகமான அரை சதமடித்து 625 ரன்கள் குவித்தார். அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக 712 ரன்கள் குவித்த அவர் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் ஓய்வு பெறும் போது ஜெய்ஸ்வால் ஜாம்பவானாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -