391 ரன்ஸ்.. ஸ்டார்க்கை நொறுக்கி கணக்கை முடித்த ஜெய்ஸ்வால்.. சச்சின், சேவாக் சாதனைகளை உடைத்து புதிய சாதனை

Jaiswal 2
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் முதல் முறையாக 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியிலேயே 161 ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதற்கடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் அவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கினார். குறிப்பாக முதல் போட்டியில் நீங்கள் மிகவும் மெதுவாக பந்து வீசுகிறீர்கள் என்று அவரிடம் ஜெய்ஸ்வால் சொன்னார். அதற்கு பதிலடியாக அடுத்த போட்டிகளில் அவரை அவுட்டாக்கி ஸ்டார்க் அசத்தினார். ஆனால் அதற்காக அசராத ஜெய்ஸ்வால் 4வது போட்டியில் மொத்தம் 164 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஸ்டார்க்கிற்கு பதிலடி:

தற்போது நடைபெறும் சிட்னி போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் ஆட்டமிழந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்கள் அடித்து ஸ்காட் போலண்ட் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 0, 4, 4, 4, 0, 4 என 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டு மொத்தம் 16 ரன்கள் குவித்தார்.

அந்த வகையில் ஸ்டார்க்கை இந்தத் தொடரின் கடைசி இன்னிங்ஸில் அடித்து நொறுக்கி ஜெய்ஸ்வால் கணக்கை முடித்தார் என்று சொல்லலாம். மேலும் அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் முதல் ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற வீரேந்திர சேவாக், ரோஹித் தர்மா ஆகியோர் சாதனைகளையும் ஜெய்ஸ்வால் உடைத்தார்.

- Advertisement -

22 வயதில் அபாரம்:

இதற்கு முன் சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருமே அதிகபட்சமாக 13 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனை. அத்துடன் இந்த தொடரில் மொத்தமாக 10 இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 391 ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் 23 வயதுக்குள் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: விராட் கோலியை வச்சு செய்து மிரட்டலான சாதனையை நிகழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் – விவரம் இதோ

இதற்கு முன் கடந்த 1991-92 ஆஸ்திரேலிய தொடரில் சச்சின் தன்னுடைய 19 வயதில் 9 இன்னிங்க்ஸில் 368 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் இத்தொடரில் ஜெய்ஸ்வால் முதல் முறையாக தன்னுடைய கேரியரில் ஆஸ்திரேலியாவில் விளையாடினார். அந்த தொடரில் ஒரு சதம் இரண்டு அரை சதங்கள் உட்பட 391 ரன்கள் குவித்துள்ள அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement