ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவை அபாரமாக பந்து வீசிய இந்தியா 104 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
ஜெய்ஸ்வால் அபாரம்:
அதன் பின் 46 ரன்கள் முன்னிலையுடன் களம் இறங்கிய இந்தியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது நாள் முடிவில் அவுட்டாகாமல் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறது. அவர்களுடைய அபார ஆட்டத்தால் இரண்டாவது நாள் முடிவில் 172-0 ரன்கள் எடுத்துள்ள இந்தியா மொத்தம் 218 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
களத்தில் ஜெய்ஸ்வால் 90*, கேஎல் ராகுல் 62* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இந்த தொடரில் முதல் முறையாக இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தம்முடைய தவறை திருத்திக்கொண்டு ஆஸ்திரேலியா பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு வருகிறார்.
உலக சாதனை சிக்ஸர்கள்:
அந்த வாய்ப்பில் இதுவரை 7 பவுண்டரி 2 சிக்சருடன் அவர் 90* (193) ரன்கள் எடுத்துள்ளார். இதையும் சேர்த்து 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற ஜோ ரூட் உலக சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். அந்த இருவருமே இதுவரை 12 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: 218 ரன்ஸ் லீட்.. ஆஸியை சொந்த மண்ணில் திணறடிக்கும் இந்தியா.. ஜெய்ஸ்வால் – ராகுல் வரலாற்று சாதனை
மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் மிகவும் இளம் வயதில் அரை சதம் அடித்த இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இவை அனைத்தையும் விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மெக்கல்லம் சாதனையை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 34* (2024)
2. ப்ரெண்டன் மெக்கல்லம்: 33 (2014)
3. பென் ஸ்டோக்ஸ்: 26 (2022)



