உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா (அ) டை ஆனால் யார் சாம்பியன் தெரியுமா ? – விவரம் இதோ

Williamson-1
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டிடை சுவாரசிய படுத்த ஐசிசி உருவாக்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜூன் 18-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடரானது ஒன்பது அணிகளுக்கு இடையே நடைபெற்றது அதன்படி ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ் என ஒன்பது அணிகளும் 25 தொடரில் மோதி தற்போது இறுதியாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ளன.

INDvsNZ

இடையில் 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட சில போட்டிகள் தடைப்பட்டது. இருப்பினும் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடர்களை வைத்து புள்ளிகளை சரியாக கணக்கிட்ட ஐசிசி இறுதிப் போட்டிக்காக இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் தகுதி பெற்ற அணிகளாக அறிவித்தன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு இருந்து வருகிறது அந்த கேள்வி யாதெனில் இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஏதேனும் காரணங்களில் போட்டி நடத்த முடியாமல் போனால் என்ன ஆகும் ? அதே போன்று போட்டி டிராவிலோ ? அல்லது (டை) சமநிலையில் முடிந்தால் எந்த அணி சாம்பியன் ? என்ற கேள்விகள் அதிக அளவில் வலம் வருகின்றன.

INDvsNZ

இது குறித்து பதிலளித்த ஐசிசி : போட்டி நடத்த முடியாமல் போனால் டை பிரேக்கர் ஏதும் கிடையாது என்றும் ஆனால் ரிசர்வ் டே நிச்சயம் உண்டு என்றும் அறிவித்துள்ளது. அதேபோன்று நடைபெறும் இறுதிப் போட்டி டிராவிலோ அல்லது இரு அணிகளும் டையில் முடித்தாலோ இரு அணிகளுக்குமே சாம்பியன் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும். அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சாம்பியன் அணிகளாக அறிவிக்கப்படும் என்று ஐ.சி.சி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது.

williamson

மேலும் சாதாரணமாக நடைபெறும் 5 நாள் டெஸ்ட் போட்டியில் மோசமான வானிலை அல்லது மைதானத்தில் வெளிச்சம் இன்மை, மழை போன்ற காரணங்களால் போட்டிகள் தடைபட்டால் வழக்கமான விதிமுறைகளே கையாளப்படும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement