இன்னைக்கு மட்டுமல்ல நாளைக்கும் மேட்ச் நடக்காது. சவுத்தாம்டன் நகரின் வானிலை நிலவரம் – கூறுவது என்ன ?

Ageas-bowl
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இன்று இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற இருந்தது. இன்று துவங்க இருந்த முதல் நாள் ஆட்டம் தற்போது வரை மழை பெய்து வருவதால் திட்டமிட்டபடி தொடங்கப்படாமல் உள்ளது. இந்திய நேரப்படி மதியம் (2.30pm) இரண்டு முப்பது மணிக்கு டாஸ் போடப்பட வேண்டிய நிலையில் தற்போது வரை இந்த போட்டிக்கான டாஸ் போடப்படவில்லை.

- Advertisement -

கிட்டத்தட்ட 4 மணி நேரங்களை கடந்தும் இன்னும் மழையின் தாக்கம் இருப்பதனால் போட்டி தொடங்கப்படாமல் இருக்கிறது. மழை நின்ற பிறகே டாஸ் போடப்படும் என அம்பயர்கள் அறிவித்துள்ளதால் இந்த போட்டி திட்டமிட்டபடி துவங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் நாளையும் போட்டி நடைபெறுவது சிக்கல்தான் என்று தெரிகிறது.

ஏனெனில் சவுத்தாம்ப்டன் நகரின் வானிலை அறிக்கையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டியின் பெரும்பாலான பகுதிகள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்று போட்டி மழையால் பாதிக்கப்படும் வேளையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தாலும் பெரும்பாலான ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் போது நிச்சயம் இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

rain

அல்லது போட்டி துவங்கினால் டிராவை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கான முடிவு என்ன ஆகும் என ஒரு கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டி ஒருவேளை டிராவை நோக்கி நகர்ந்தால் நிச்சயம் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.

indvsnz

ஆனால் தற்போது தான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளதால் நிச்சயம் ஏதாவது ஒரு அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. வருண பகவானின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே எஞ்சியுள்ள நாட்களில் போட்டி நடைபெறும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement