போர்முலா 1 ரேஸ் கார் வாங்க பணமில்லா காரணத்தால் கிரிக்கெட்டில் நுழைந்த வீரர்..!

saha
- Advertisement -

இந்திய டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர்களில் ஒருவராக விர்திமன் சாஹாவும் இருந்து வந்தார். ஆனால், சமீப காலமாக இவரது ஆட்டம் சரிவர அமையாததால் சில காலமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைத்ராபாத் அணியில் விளையாடி வந்த போதும் இவரின் ஆட்டம் காலரை தூக்கி சொல்லும் அளவிற்கு இல்லை.

wriddhiman saha

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர்
சாஹாவிடம் ‘ஒருவேளை சாஹா கிரிக்கெட்டில் வராமல் இருந்தால் என்னவாக இருந்திருப்பார்’ என்று ஒரு ஸ்வாரசியமான கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சாஹா ‘ எனக்கு சிறு வயது ஆசை ஒன்று இருந்தது. ஒரு வேளை என்னிடம் அதிக பணம் இருந்திருந்தால், நான் சிறு வயதில் ஒரு பார்முலா 1 வீரராக வர வேண்டும் என்று நினைத்தேன்.

எனது சிறு வயதில், அதிகாலை 3 மணிக்கே எழுந்து பார்முலா 1 போட்டிகளை காணுவேன். ஒரு வேலை என்னிடம் அப்போது அதிக பணம் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக ஒரு பார்முலா 1 வீரராக வந்திருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார். ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னாள் ஜே சி முகர்ஜி ட்ரோபி தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் , சாஹா 20 பந்துகளில் 102 ரன்களை குவிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

saha

நேற்று(ஜூன் 14) பெங்களூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவருக்கு முன்னதாக விர்திமன் சாஹா தான் இந்த போட்டியில் இடம்பெற்றிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு விரலில் காயம் ஏற்படவே அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

Advertisement