தோனியின் இடத்தை இவர் நிரப்புவாரா.! மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள்..!

dhonii
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 4 ஒரு நாள் போட்டிகளுக்கும் மற்றும் இந்தியா A அணி – இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிக்கும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தரப்பு போட்டி அடுத்த ஜூன் மதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் அதன் பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக 4 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் ஜூலை மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

shah1

- Advertisement -

இந்த போட்டிக்கான வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் யோ யோ டெஸ்ட் மூலம் தேர்தெடுக்கப்பட்டு மீண்டும் வடிகட்ட பட்டனர். இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக விர்த்திமான் சாஹா இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சாஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கபட்டது. இந்நிலையில் தற்போது சாஹா உடல் நலம் தேறி வருவதால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

shah

சமீபத்தில் இதுகுறித்து வந்த தகவலின்படி ,விர்திமான் சாஹா காயம் ஏற்பட்டதால் தான் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவரது காயம் குணமாகி அவர் முழு தகுதி பெற்றுள்ளார். எனவே,அவர் இங்கிலாந்து எதிரான போட்டிகளில் கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது’ என்று அணி நிர்வாகம் எண்ணி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement