ரோஹித் போலவே ஹர்மன்ப்ரீத் தலைமையில் அசத்தும் வலுவான மகளிர் மும்பை அணி – முழுமையான அணி விவரம் இதோ

Mumbai Indians MI
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்திய மகளிர் அணி திண்டாடுவதற்கு தரமான இளம் கிரிக்கெட் வீராங்கனைகளின் பற்றாக்குறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இந்தியா ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் மகளிர் வெர்சனை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை சமீப காலங்களாகவே வலுத்து வந்தது. அதை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ சமீப காலங்களில் மினி அளவில் நடத்தி வந்த மகளிர் ஐபிஎல் தொடரை வரும் மார்ச் 4 – 26 வரை வரலாற்றில் முதல் முறையாக பெரிய அளவில் முழுமையான தொடராக நடத்த உள்ளது.

அதற்கான வீராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து களமிறங்கிய மொத்தம் 409 வீராங்கனைகள் வாங்க ஏற்கனவே அணிகளை வாங்கிய மும்பை, பெங்களூரு, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 5 அணி நிர்வாகங்கள் களமிறங்கின. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் வீராங்கனையாக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளரை 1.8 கோடி என்ற பெரிய தொகைக்கு போட்டி போட்டு வாங்கியது.

- Advertisement -

வலுவான மும்பை:
அவரை விட இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர அதிரடி வீராங்கனையான நட் ஸ்கீவரை 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு மும்பை வாங்கி அசத்தியது. அதே போல் நியூசிலாந்தின் இளம் அதிரடிவேக பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வீராங்கனையான எமிலியா கெரை 1 கோடிக்கு வாங்கிய மும்பை அணி வெஸ்ட் இண்டீஸ் இளம் வீராங்கனை ஹய்லை மேத்தியூஸை 40 லட்சம் என்ற குறைந்த விலைக்கு வளைத்து போட்டது. இந்த 3 வீராங்கனைகளும் தற்சமயத்தில் டி20 போட்டிகளுக்கான ஐசிசி மகளிர் ஆல் ரவுண்டர்கள் டாப் 10 தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதன் வாயிலாக பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இதர மகளிர் ஐபிஎல் அணிகளை காட்டிலும் வலுவான தரமான ஆல் ரவுண்டர்களைக் கொண்ட அணியாக மும்பை உருவெடுத்துள்ளது. அது போக பூஜா வஸ்திரகர், யஸ்டிக்கா பாட்டியா போன்ற நிறைய இளம் வீராங்கனைகளை குறைந்த விலைக்கு வாங்கியுள்ள மும்பை மகளிர் ஐபிஎல் தொடரில் மிகவும் வலுவான அணியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக முக்கிய இடங்களில் தரமான வீரர்களை வாங்கி ஆணிவரை வலுவாக அமைப்பதே ஆடவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வாங்கிய மும்பை அணியின் வெற்றிக்கான தாரக மந்திரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்சமயத்தில் இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா போலவே இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் தரமான வீராங்கனைகளை வாங்கியுள்ள மும்பை முதல் சீசனிலேயே கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

2023 மகளிர் ஐபிஎல் தொடரில் களமிறங்கப்போகும் ஹர்மன்பிரீத் கெளர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதோ:
ஹர்மன்ப்ரீட் கௌர் (1.8 கோடி), நட் ஸ்கீவர் (3.2 கோடி), எமெலியா கெர் (1 கோடி), பூஜா வஸ்திரக்கர் (1.9 கோடி), யஸ்டிக்கா பாட்டியா (1.5 கோடி), ஹீதர் கிரகாம் (30 லட்சம்), இஸ்பெல்லே ஓங் (30 லட்சம்), அமஞ்சோத் கௌர் (50 லட்சம்), தாரா குஜார் (10 லட்சம்), சைக்கா இஷாக் (10 லட்சம்), ஹய்லே மேத்தியூஸ் (40 லட்சம்), சோலோ ட்ரைன் (30 லட்சம்), ஹுமைரா காசி (10 லட்சம்), பிரியங்கா பாலா (20 லட்சம்), சோனம் யாதவ் (10 லட்சம்), ஜிண்டிமணி கலிதா (10 லட்சம்), நீலம் பிஷ்ட் (10 லட்சம்)

இதையும் படிங்க: WPL RCB : ஆடவர் டீமை மிஞ்சி முதல் கோப்பையை தூக்க வரும் வெறித்தனமான மகளிர் ஆர்சிபி அணி – மொத்த அணி விவரம் இதோ

இந்த அணியில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவெனில் தாரா குஜார் மட்டுமே முழுமையான பேட்டிங் வீராங்கனை ஆவார். அவரை தவிர்த்து ஹர்மன் பிரீத், நட் ஸ்கீவர், பூஜா வஸ்திரகர், எமிலியா கெர் போன்ற 12 வீராங்கனைகள் பேட்டிங் பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தும் திறமை பெற்றவர்கள். அதனால் ஆல்ரவுண்டர்களால் ஆளப்போகும் அணியாக மும்பை ஜொலிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Advertisement