உலகின் காஸ்ட்லி பேட் யாருடையது…! எத்தனை லட்சங்கள் தெரியுமா ? – வைரலாகும் வீடியோ

Costly-bats
- Advertisement -

1983க்கு பின்னர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் 2011இல் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற போது இறுதிப்போட்டியை வெல்ல காரணமான தோனியின் சிக்ஸர் அமைந்தது.அப்போது தோனி சிக்ஸர் அடிக்க பயன்படுத்திய பேட் தான் தற்போது வரை உலகின் காஸ்ட்லியான பேட்டாக திகழ்கின்றது.

Dhoni

இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடிக்க பயன்பட்ட பேட்டை இலண்டனில் 2011ம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஏலத்தில் இலண்டன் மதிப்புப்படி சுமார் 10,00,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனதாம். இந்த மதிப்பு இந்திய ரூபாயின் படி சுமார் 92 இலட்சமாகும்.ஆர்.கே.குளோபல் சேர்ஸ் & செக்யூரிட்டி என்கிற பன்னாட்டு நிறுவனம் தான் தோனியின் பேட்டை இவ்வளவு விலை குடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளதாம்.

- Advertisement -

உலகிலேயே காஸ்ட்லியான பேட் என்கிற சாதனையை தோனி பயன்படுத்திய பேட் பெற்றுள்ளதால் தோனிக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளது.ஏப்ரல் 2ம் தேதி 2011ம் ஆண்டு நடைறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா இலங்கையா என உலகம் முழுவதிலுமிருந்து பல கோடி ரசிகர்கள் ஆர்வமோடு காத்திருக்க மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி இறுதிப்போட்டி தொடங்கியது.
dhoni1

முதலில் களமிறங்கி ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 6விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்தது.275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. முதல் பத்து ஓவர்கள் முடிவதற்குள் மூத்த வீரர்களான சச்சின் மற்றும் சேவாக்கின் விக்கெட்டுகளை இழந்து ஒருபுறம் தத்தளித்தது.

பின்னர் களமிறங்கிய கம்பீரும், தோனியும் இலங்கை அணியினரின் பந்துகளை விளாச 48.2 ஓவர்களிலேயே வெற்றிக்கு தேவையான 274 ரன்களை கடந்து தோனி அடித்த சிக்ஸரால் 277 ரன்களை எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது.இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு 122பந்துகளில் 97 ரன்களை எடுத்தார்.

இந்திய அணியின் கேப்டன் தோனி இறுதிவரை நிலைத்து ஆடி 79பந்துகளில் 8பவுண்டரி மற்றும் 2சிக்ஸர்கள் உட்பட 91 ரன்களை குவித்து இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். உலகக்கோப்பை போட்டி தொடங்கும் முன்னரே சொன்னபடி கோப்பையை சொல்லி அடித்த இந்திய அணி சச்சினுக்கு அந்த கோப்பையை சமர்பித்தது.தோனி தனது வழக்கமான ஸ்டைலில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் சிக்ஸர் அடித்து அசத்தியதாலேயே தோனியின் பேட் உலகின் காஸ்ட்லியான பேட்டாக மாறிவிட்டது.

Advertisement