Worldcup : இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இங்கிலாந்தில் இவ்வளவு ஆரவாரமா ? – விவரம் இதோ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

எப்போதும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி சுவாரசியமாக இருக்கும். அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரின் பலத்த எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் கருதப்படுகிறது. அதன்காரணமாக டிக்கெட் விற்பனையில், மற்ற எந்த போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு சுமார் நான்கு லட்சம் ரசிகர்கள் இணையத்தில் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதில் 70 சதவீதம் இந்தியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. பின்னர், டிக்கெட் விற்பனை துவங்கிய 48 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. எந்த நாட்டில் இந்திய அணி போட்டிகள் நடைபெற்றாலும் நமது இந்திய ரசிகர்கள் சென்று பார்த்து பெரிய அளவில் ஆதரவு தருகின்றனர். வழக்கம்போல் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Advertisement