உலகக்கோப்பை இறுதி போட்டியின் டிக்கெட் விலை இத்தனை லட்சமா ? – தலைசுற்ற வைக்கும் டிக்கெட் விலை

worldcup
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

eng vs nz

- Advertisement -

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றின் 27 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுவும் சொந்த மண்ணான இங்கிலாந்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதால் அதை காண உள்நாட்டு ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் மக்களின் இந்த ஆர்வத்தை பணமாக மாற்றுவதற்கு சிலர் முயன்று வருகின்றனர்.

fans

icc அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் போட்டிக்கான டிக்கெட் விற்கப்பட்டாலும் மறுபுறம் ஐசிசி அங்கீகரித்த முகாம்களில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில் ப்ரீமியம் டிக்கெட் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Fans 1

இதற்கிடையே டிக்கெட் விற்பனை தங்களால் அங்கீகரிக்கப்பட்ட மையம் மூலமாகவே வாங்க வேண்டும் என்றும் இல்லை என்றால் மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement