மோதிரா மைதானத்தை தொடர்ந்து இந்தியாவில் அமையவுள்ள 3 ஆவது மிகப்பெரிய மைதானம் – சுவாரசிய தகவல் இதோ

Jaipur

சமீபத்தில் பிசிசிஐ சார்பாக குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆன மோதிரரா மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் விதத்தில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணற்ற பல நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மைதானம் தற்போது போட்டிகளுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அதற்கடுத்து உலகிலேயே மூன்றாவது பெரிய மைதானம் ஒன்றினை தற்போது கட்டப்பட இருக்கிறது. உலக அளவில் தற்போது மோதிரா ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரசிகர்கள் காணும் வசதிகளுடன் முதலிடத்திலும், அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி உடன் இரண்டாவது இடத்திலும் மிகப் பெரிய மைதானமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் 75 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் போட்டியை கண்டு ரசிக்கும் படி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கட்ட மைதானத்தை கட்டமைக்க உள்ளது. இதற்காக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஜெய்ப்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தை விலைக்கு வாங்கி சுமார் 100 ஏக்கர் இடத்தில் 350 கோடி ரூபாய் செலவில் இரண்டு கட்டமாக இந்த மைதானத்தை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Motera-1

வேலையை தொடங்குவதில் இருந்து சரியாக இரண்டு ஆண்டிற்குள் மைதானம் தயாராகி விடும் என ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் இரண்டு பயிற்சி மைதானங்களிலும் வடிவமைக்கப்பட உள்ளது.. இந்த இரண்டு பயிற்சி மைதானங்களிலும் ரஞ்சி கோப்பை போட்டிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 30 வலைப்பயிற்சி பகுதியும், 250 பேர் அமரக்கூடிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறையும் கட்டப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

motera

மேலும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலாளர் மகேந்திர ஷர்மா கூறுகையில் : மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம், விளையாட்டு பயிற்சி அகாடமி மற்றும் 4000 வாகனங்கள் பார்க்கிங் வசதி களுடன் கட்டப்படும் என்றும் இதற்காக ஆகும் செலவில் 90 கோடி ரூபாய் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் செலவழிக்கும் என்றும் 100 கோடி ரூபாய் பிசிசிஐ-யிடம் கேட்கயிருப்பதாகவும், 100 கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.