World Cup 2019 : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிக்கப்படும் – பி.சி.சி.ஐ

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார்

worldcup
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம்.

indiateam

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் உலககோப்பை தொடரின் வீரர்கள் பற்றிய தகவல்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ அறிவிப்பினை பி.சி.சி.ஐ வெளியிட உள்ளது.

india

அதன்படி அடுத்தவாரம் மும்பையில் இந்திய அணி வீரர்களின் தேர்வு மும்பையில் நடைபெறுகிறது. அந்த மீட்டிங் முடிந்ததும் ஏப்ரல் 15 ஆம் தேதி முறைப்படி உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

teamindia

இந்த கூட்டத்தில் இந்திய அணியின் 4 ஆம் நிலை வீரரின் இடம் அதிக அளவில் விவாதிக்கப்படும் விடயமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோலி கேப்டன் பதவியில் எந்த மாறுதலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virat-Kohli

தற்போது ஐ.பி.எல் தொடர் நடந்து வருவதால் அதனை வைத்து இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் கனவுகள் நனவாகாது. ஏனெனில் இந்திய அணியை கிட்டத்தட்ட சில மாதங்களுக்கு முன்பே பி.சி.சி.ஐ உறுதிப்படுத்திவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement