உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ள அகமதாபாத் “மோதிரா”வின் ஐந்து சிறப்பு அம்சங்கள் – பாத்தா அசந்துடுவீங்க

Motera-1

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்த ஸ்டேடியம் தான் இருந்து வந்தது. தற்போது அதனை மிஞ்சும் விதமாக அகமதாபாத் நகரில் உள்ள மோதிரா ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆக அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைத்தார்.

தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஐந்து சிறப்பு அம்சங்களைக் காணலாம்

முன்னதாக மெல்பேர்ன் மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கலாம். தற்போது ஆமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 1,10,000 ரசிகர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. தற்போது இதுதான் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம்.

இந்த மைதானம் முன்னதாக பெரிதாக எந்த வசதியும் இல்லாமல் இருந்தது இது மறு கட்டமைக்கப்பட்டு 4 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது.

மற்ற மைதானங்களில் இரவில் கிரிக்கெட் விளையாடினால் வீரர்களின் நிழல் நான்கு திசையிலும் விழும். ஆனால் இந்த மைதானத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது . இதன் காரணமாக வீரர்களின் நிழல் தரையில் விழாது . வீரர்களின் கவனம் திசை திரும்பாமல் நன்றாக விளையாடலாம்

- Advertisement -

motera

மற்ற மைதானங்களை போலல்லாமல் மைதானத்திலும் மைதானத்தை சுற்றிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழை பெய்தால் வெகு சீக்கிரம் தண்ணீர் வடிந்து விடும்.

motera

இந்த மைதானத்தில் பத்தாயிரம் இருசக்கர வாகனங்களும் 3000 கார்கள் நிறுத்தும் அளவில் பார்க்கிங் வசதி உள்ளது .மேலும் நேரடியாக மெட்ரோ ரயிலில் இருந்து வந்து இங்கு இறங்கிக்கொள்ளும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் ஆகியவை அங்கு நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -