2007 மாதிரி மீண்டும் மேஜிக் நடந்து 2022 டி20 உ.கோ இந்தியா வெல்லும் – இந்திய வீரர் நம்பிக்கை

IND
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வெல்லுமா என்ற கலக்கம் இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. ஆனால் மினி உலகக் கோப்பையை போன்ற 2022 ஆசிய கோப்பையில் வழக்கம்போல அழுத்தமான போட்டிகளில் சொதப்பிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பியது.

IND vs SL

இதனால் இங்கயே கோப்பையை தக்க வைக்க முடியாமல் கோட்டைவிட்ட இந்தியா 2 மடங்கு போட்டி நிலவக்கூடிய ஆஸ்திரேலியாவில் எங்கே உலக கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கேற்றார்போல் ஆசிய கோப்பையில் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்த அதே வீரர்கள் மீண்டும் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணிக்கு திரும்பினாலும் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

பார்மில் விராட்:
இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த ஆசிய கோப்பையில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஆஸ்திரேலிய மண்ணிலும் வரலாற்றில் நிறைய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியது இந்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Virat Kohli

“அவர் செயல்படும் விதத்தை வைத்து அனேகமாக விராட் கோலி திரும்பி விட்டார் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நிலவும் கடினமான பவுன்ஸ் நிறைந்த சூழ்நிலைகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகினாலும் அக்சர் படேல் இருக்கிறார். இந்திய அணியில் ஒருவர் சென்றால் ஒருவர் வந்து விடுகிறார்கள். இந்த ஸ்பெஷல் வாய்ப்பு ஐபிஎல் தொடரால் நமக்கு கிடைத்துள்ளது”

- Advertisement -

“மேலும் ரவி பிஷ்னோய் போன்ற நிறைய இளம் வீரர்களும் நம்மிடம் உள்ளனர். அத்துடன் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அக்சர் பட்டேல் நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே இந்தியாவுக்காக விளையாடியவர் முறையில் நம்முடைய நாட்டுக்கு யார் விளையாடினாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Sreesanth MS Dhoni

மேலும் ஆசிய கோப்பையை தோற்று விட்டோம் என்பதற்காக இந்திய ரசிகர்கள் கவலைப்பட கூடாது என்று தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த் 2007இல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலகக் கோப்பையை தோற்ற அடுத்த சில மாதங்களிலேயே தென் ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையில் தோனி தலைமையில் நிகழ்ந்த மேஜிக் வெற்றியை போல இம்முறையும் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது லெஜெண்ட்ச் தொடரில் விளையாடி வரும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பையில் தோல்வியுற்றாலும் நம்மிடம் மிகச் சிறந்த அணி உள்ளது. 2007இல் நடந்தது போலவே இப்போதும் நடைபெற்றுள்ளது. அதாவது 2007 டி20 உலகக் கோப்பைக்கு சற்று முன்பாக வெஸ்ட் இண்டீஸில் 50 ஓவர் உலகக் கோப்பையில் நாம் தோற்றிருந்தோம்”

“எனவே அந்த தோல்வி தான் உங்களுக்கு முழுமையான கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வெற்றி உந்து கோலாக அமையும். உலகில் அனைத்து அணிகளும் சிறப்பான அணிகள் என்றாலும் நான் இந்தியா சிறப்பாக செயல்படுவதை விரும்புகிறேன். மேலும் தேர்வு செய்யப்பட்ட அணியைப் பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் சிறப்பான அணிதான் தேர்வு செய்யப்பட்டிருக்கும். 2007இல் கூட நிறைய வீரர்கள் ஏற்கனவே விளையாடிய அனுபவமில்லாதவர்களாக இருந்த போதிலும் வென்றோம். எனவே யார் விளையாடுகிறார் யார் விளையாடவில்லை என்பதை விட இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement