அந்த 3 பேரும் சேர்ந்தா உலகின் எந்த அணியையும் இந்தியாவால் தெறிக்க விட முடியும்.. ஜஹீர் கான்

Zaheer Khan
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதன் வாயிலாக 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா சாதனை படைத்தது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று கோப்பையை பகிர்ந்து கொண்டது.

குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த முகமது சிராஜ் தென்னாபிரிக்காவை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி இந்தியா சாதனை படைக்க உதவினர். அவருக்கு நிகராக 2வது இன்னிங்சில் தம்முடைய தரத்தை காண்பித்த ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களை கேப் டவுன் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைக்க உதவினார்.

- Advertisement -

3 பேரும் சேர்ந்தா:
அதனால் முதல் போட்டியில் காயத்தால் வெளியேறிய முகமது ஷமி விளையாடியிருந்தால் இந்தியா இந்நேரம் இந்த தொடரையே வென்றிருக்கும் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகளை அள்ளிய முகமது ஷமி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

இந்நிலையில் ஷமி, பும்ரா, சிராஜ் ஆகிய 3 உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாக விளையாடினால் உலகில் எந்த அணியையும் இந்தியாவால் திணறடிக்க முடியும் என்று ஜாம்பவான் ஜஹீர் கான் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி என்ன செய்வார் என்பதை நாம் பார்த்தோம். அவர் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் வீக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர்”

- Advertisement -

“ஜஸ்பிரித் பும்ரா நிரூபிக்கப்பட்ட மேட்ச் வின்னர். அதே போல முகமது சிராஜ் கடந்த சில வருடங்களாக பல்வேறு அம்சங்களிலும் நிறைய முன்னேற்றத்தை காண்பித்துள்ளார். எனவே இந்த 3 பேரும் ஒன்றாக விளையாடினால் மைதானமும் சூழ்நிலையும் எதுவாக இருந்தாலும் உலகின் எந்த அணியையும் இந்திய அணியால் திணறடிக்க முடியும்”

இதையும் படிங்க: 35 – 36 வயசாகிடுச்சேன்னு நினைக்காதீங்க.. அதுல இப்போவும் நெருப்பா இருப்பாங்க.. கோலி, ரோஹித்துக்கு கவாஸ்கர் ஆதரவு

“அதிலும் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த முகமது சிராஜ் இந்தியாவை தூக்கி நிறுத்தி தொடரில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஏனெனில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியிலும் தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்பு இருந்தது. இருப்பினும் முகமது சிராஜ் தன்னுடைய முதல் ஸ்பெல்லிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று கூறினார்.

Advertisement