கடந்த 50 ஆண்டுகளில் இவரே இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் – விஸ்டன் நடத்திய சர்வே முடிவு இதோ

- Advertisement -

விஸ்டன் இதழ் சமயத்தில் வித்தியாசமான ஒரு ஓட்டெடுப்பு நடத்தி உள்ளது. அதாவது கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்று ரசிகர்களிடம் ஆன்லைனில் கேள்வி கேட்டிருந்தது. இதில் 14 பேர் கொண்டஇந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

dravid

சச்சின் டெண்டுல்கர், குண்டப்பா விஸ்வநாத், விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், புஜாரா, விரேந்தர் சேவாக், மகேந்திர சிங் டோனி, முகமது அசாருதீன், அஜிங்கிய ரஹானே, திலிப் வெங்சர்க்கார், மாக் பட்டோடி, கௌதம் கம்பீர் என 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

- Advertisement -

இந்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு சச்சின் டென்டுல்கர், விராத் கோலி, ராகுல் டிராவிட் ,சுனில் கவாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 11,000 ரசிகர்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக ராகுல் டிராவிட் 52 சதவீத வாக்குகளைப் பெற்று சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தி இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றார்.

Dravid 1

மூன்றாவது இடத்தை விராட் கோலியும், நான்காவது இடத்தை சுனில் கவாஸ்கரும் பிடித்தனர். ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 16 ஆண்டுகளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 52.31 ஆகும். சச்சின் டெண்டுல்கர் 24 வருடங்கள் இந்தியாவிற்காக விளையாடி 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்துள்ளார் இதன் சராசரி 53.81 ஆகும்.

- Advertisement -

இருவருமே ஒப்பிடக் கூடியவர்கள் தான். இருவருக்கும் டெஸ்ட் போட்டியில் அபார திறமை இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு அளப்பரியது. சச்சின் டெண்டுல்கரை போல் அல்லாமல் ஒரு அணியின் வீரராக எந்த இடத்திலும் இறங்க கூடியவர். 1 முதல் 11வது வரை இறங்கி விளையாடி உள்ளார் டிராவிட்.

dravid

விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியுள்ளார். ஸ்லிப்பில் நின்றுகொண்டு 205 கேட்ச்கள் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பிடித்துள்ளார். இப்படி பார்க்கையில் ராகுல் டிராவிட் தான் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்.

Advertisement