டி20 உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் இந்திய பிளேயிங் லெவன் இதுதான் – விஸ்டன் தேர்வு

IND-2
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற்றபோது இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இல்லாமல் தோனியின் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் முறையாக அந்த தொடரில் விளையாடி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2007 t20 worldcup

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக டி20 போட்டிகள் குறித்த சுவாரசியமான பல செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கான ஆல்டைம் இந்திய பிளேயிங் லெவனை தனியார் பத்திரிக்கையான விஸ்டன் அறிவித்துள்ளது.

விளையாட்டுத் துறையில் மிகவும் பிரபலமான விஸ்டன் பத்திரிகை வெளியிடும் செய்திகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பினை பெறும். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஆல்டைம் பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

gambhir1

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. அதேபோன்று கேப்டனாக மகேந்திர சிங் தோனியையும் தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின் மற்றும் அமித் மிஸ்ராவை தேர்வு செய்துள்ளது. அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர்களாக இர்பான் பதான், ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோரை விஸ்டன் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

Dhoni

விஸ்டன் தேர்வு செய்த ஆல்டைம் டி20 உலகக்கோப்பை பிளேயிங் லெவன் இதோ :

1) கவுதம் கம்பீர், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) யுவராஜ் சிங், 6) தோனி, 7) அஷ்வின், 8) அமித் மிஸ்ரா, 9) இர்பான் பதான், 10) ஆர்.பி சிங், 11) ஆஷிஷ் நெஹ்ரா

Advertisement