கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான். விஸ்டன் பத்திரிகை அளித்த கவுரவம் – விவரம் இதோ

Ind
- Advertisement -

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஸ்டன் பத்திரிக்கை சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயரை தங்களது பத்திரிகையில் அறிவிப்பார்கள். அதனைப்போன்று தற்போது 2019ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரராக விளங்கிய கிரிக்கெட் வீரர்களை விஸ்டன் பத்திரிகை தேர்வு செய்தது.

Kohli-1

- Advertisement -

அதன்படி 5 வீரர்கள் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த 5 வீரர்களில் இந்திய அணியின் கேப்டன் கோலியும் இடம்பெற்றுள்ளார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஸ்டன் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து அவர்களின் பெயரை வெளியிடும்.

அந்தப் பத்திரிகையால் தேர்வு செய்யப்படும் வீரர்கள் உலக அளவில் உள்ள ரசிகர்களின் ஆதரவினால் தேர்வுசெய்யப்படுவதால் அது வீரர்களிடையே மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த 5 வீரர்களை விஸ்டன் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. அதில் ஸ்டெயின், டிவில்லியர்ஸ், ஸ்மித் மற்றும் விராட் கோலி அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி ஆகியோரை தேர்வு செய்துள்ளது.

Kohli-2

விஸ்டன் பத்திரிக்கையின் இதற்கு முன்னர் இந்தியாவின் தோனி சச்சின் ஆகியோர் பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் 10 ஆண்டுகளில் சிறந்த வீரர் என்ற பெரிய சாதனையுடன் கோலி இடம் பிடித்திருப்பது ரசிகர்களிடையே அவர் பெற்றிருக்கும் பெரும் ஆரவார்த்தையும், ஆதரவினையும் காட்டுகிறது.

Kohli

மேலும் மற்ற வீரர்களை ஒப்பிடுகையில் 5775 ரன்கள் அதிகமாக அடித்து கடந்த 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் கோலி மிரள வைத்துள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் கோலி 70 சதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், பாண்டிங் அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார். விரைவில் அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement