டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியும் பெருந்தன்மையுடன் பேசிய வில்லியம்சன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருக்கிறது நியூசிலாந்து அணி. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி, டெஸ்ட் சாம்பியனாக மாறி இருக்கும் நியூசிலாந்து அணிக்கு, முன்னாள் வீரர்கள் மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

WTC

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியை வீழ்த்தி இருந்தாலும், நியூசிலாந்து அணியை கொண்டாடுவதில் முதிலிடம் வகித்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். கிரிக்கெட் விளையாட்டில் நியூசிலாந்து அணி மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் அணுகுமுறையானது எப்போதுமே ஜென்டில்மேன் தன்மையுடன் இருப்பதால் தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த அணியை இந்த அளவிற்கு கொண்டாடுகின்றனர். அதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் விதமாக பேட்டியளித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன்.

ஐசிசி நடத்திய மிகப் பெரிய தொடரான இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியிருந்த போதும், அதுகுறித்து பெரிதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளாத கேன் வில்லியம்சன், இந்த போட்டி முடிந்ததும் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, எங்களது அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லை என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் நாங்கள் கடினமாக போட்டியிட்டோம். ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளில் எந்த அணியும் மேலானதாக இருக்கவில்லை.

kohli rahane

இரண்டு அணிகளுமே சம பலத்துடன் இருந்தது. கடைசி நாளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் எங்களால் வெற்றி பெற முடிந்தது என்று அவர் கூறியுள்ளார். கேன் வில்லியம்சனைப்போலவே அந்த அணியின் மற்றொரு முன்னனி வீரரான ராஸ் டெய்லரும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடர்களில் இறுதி போட்டி வரை சென்று தோல்வியடைந்தபோதே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நியூசிலாந்து வீரர்கள்,

Southee 1

இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன் ஆரவாரத்தை வெளிக்காட்டாமல், மற்றொரு அணியான இந்திய அணியின் செயல்பாட்டையும் பாராட்டியருப்பது, உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement