இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக இந்த தொடர் வெற்றிக்கு இதுவே காரணம் – வில்லியம்சன் மகிழ்ச்சி

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மாங்கனி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Rahul

- Advertisement -

அதனை தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களைக் குவித்து அட்டகாசமான வெற்றியை பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை வாஷ் அவுட் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் வீரர்களான நிக்கோலஸ், கிராண்ட் ஹோம் மற்றும் குப்தில் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.

இந்த போட்டி முடிந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த தொடர் வெற்றி குறித்து கூறியதாவது : இது ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது மேலும் இந்தியாவை ஒவ்வொரு போட்டியிலும் அழுத்தத்தில் உள்ளாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இன்றைய போட்டியிலும் எங்கள் அணியின் வீரர்கள் முதல் பாதியில் சிறப்பாக இந்திய அணியுடன் போட்டி போட்டனர் அனைத்து வீரர்களின் திறனும் அருமையாக வெளிக்காட்டினர்.

எங்களது வீரர்கள் இந்த தொடர் முழுவதும் அவர்களுடைய ஆதிக்கத்தை செலுத்தினர். அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மேலும் இந்தியா போன்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் போது இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் கற்றுக்கொண்டது சிறப்பான ஒரு விடயமாக அமைந்தது.

indvsnz

மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் எங்களது இந்த ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இந்திய அணிக்கு எதிராக இதுபோன்ற எங்களது ஆட்டம் நிச்சயம் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மேலும் இத்தொடரில் எங்களுக்கு ஒரு சிறப்பான நினைவுகளை உண்டாக்கியுள்ளது என்று வில்லியம்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement