இது ஒரு கடினமான நாள். மீண்டும் நாங்கள் தோல்வி அடைய இதுவே காரணம் – வில்லியம்சன் வேதனை

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.

Guptill

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஒவ்ரகள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக குப்தில் 33 ரன்களையும், சைபர்ட் 33 ரன்களையும் குவித்தனர்.

அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் தொடக்க வீரர் ராகுல் 50 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்றார். ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் குவித்தார். ராகுல் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

rahul 3

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கேன் வில்லியம்சன் கூறியதாவது : இது ஒரு கடினமான நாள் முதல் போட்டியில் இருந்து இந்த மைதானம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. எங்களது பேட்டிங் இன்னும் சற்று முன்னேற்றம் தேவை. 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்தால் சவால் நிறைந்த ஆட்டமாக மாறியிருக்கும். இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தினார்கள்.

- Advertisement -

bumrah 2

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் தள்ளி அனைத்து விதத்திலும் தங்களது திறமையை நிரூபித்தனர். எங்களால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தோம் ஆனால் இந்திய அணி வீரர்கள் அவர்களுடைய அனுபவத்தை இந்த போட்டியில் காண்பித்தனர். போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்று சிறப்பாக முடித்தனர். இந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் நாங்கள் நிச்சயம் குவித்து இருந்தே ஆக வேண்டும். அதுவே எங்களது தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.

அடுத்த போட்டியில் நிச்சயம் இதைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். தோல்வியை மனதில் வைக்காமல் அடுத்த போட்டிக்காக கடந்து செல்ல இருக்கிறோம். ஒரு அணியாக இந்தியா போன்ற அணிகளுக்கு இடையே நாங்கள் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம் என்று வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement